பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

231


ஓர் ஆனந்தம். உமார் இல்லாத பொழுது ஆயீஷாவுக்கு இதுவே பொழுது போக்கு:

ஒருநாள், உமாரின் குதிரை தூரத்தில் வரும் பொழுதே, காவல்காரன் தன்னுடைய உத்தியோக உடையையணிந்துகொண்டு, தன் வேலையில் அதிக அக்கறையுடன் நிமிர்ந்து நிற்பதையும், தோட்டக்காரர்கள் அனைவரும் ஏதோ வேலையில் ஈடுபட்டு இருப்பதுபோல் பாசாங்கு செய்வதையும், நோய்வாய்ப் பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட அகமது என்பவன் கூட, வேலைசெய்து கொண்டிருப்பதையும், உப்பரிகைமேல் இருந்தபடியே அயீஷா கவனித்தாள்.

கலெய்க்காவும், அடுக்களை அறைக்குள்ளே, குழப்பத்துடன் ஒடியாடி வேலைகளைக் கவனித்தாள். உமார் இல்லாதபொழுது சோம்பிக் கிடக்கும் அந்த வேலைக்காரர்களின் கூட்டம், அவன் இருக்கும்பொழுது, இயந்திரங்கள்போல் ஆடுவதையும் ஓடுவதையும் எண்ணி உலகின் வெளிப்பகட்டான தன்மையைப் பற்றி சிந்தனைசெய்து கொண்டிருந்தாள் அயீஷா உமார் வந்த பிறகு அயீஷாவினால் தோட்டத்திற்குள்ளே போக முடியவில்லை. தன் அறையிலேயும், உப்பரிகையிலும்தான் அவளால் நடமாட முடிந்தது. அப்படி உப்பரிகைக்குப் போகும் பொழுதும், தன் முக்காட்டுத் துணியை முழுக்க முழுக்க இழுத்து முகத்தை முடிக்கொள்ள வேண்டியதாயிருந்தது.

ஏனெனில், உமார் தனியாக வரவில்லை. அவனுடன் ஆறு ஏழு விருந்தாளிகளும் வந்திருந்தார்கள். சிலர் விடை பெற்றுக் கொண்டு போனதும் புதிய சில விருந்தாளிகள் வந்தார்கள். இப்படியாகப் பல வாரங்களுக்கு வரும் விருந்தாளிகளை உபசரிக்கவும் பேசிக்கொண்டிருக்கவுமே சரியாக இருந்தது உமாருக்கு நாட்கள் பலப்பல கடந்து சென்று கொண்டிருந்தன. உமார் தன்னைப்பற்றியே அடியோடு மறந்து போய்விட்டானோ என்று கூட அயீஷா ஐயப்பட்டாள். தன்னுடைய அந்தப் புரத்திற்கு அப்பால் புதுப்புது மனிதர்களுடன் அவன் இருக்கும்பொழுது அவள் அவனுடன் வந்து பேசுவது என்பது இயலாத காரியம்! இஸ்லாமிய பண்பாட்டின்படி அந்தப்புரத்தில் இருக்க வேண்டிய பெண்கள் வேற்று ஆடவர் மத்தியில் வரக்கூடாது. அப்படியே