பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

237

துணுக்குத்தான் யானையென்று பெயர் என்று கூறினான். யாராவது ஒருவன் ஒரு விளக்கைக் கொண்டு வந்திருந்தால் உண்மையான யானையை எல்லோரும் நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கலாம்” என்று காசாலி கூறிக் கொண்டிருந்தான்.

“இந்த உலகத்தைச் சூழ்ந்துள்ள அறியாமை இருளைப் போக்கி ஞான ஒளி பரவச் செய்யும் விளக்க எங்கேயிருக்கிறது?” என்று உமார் கேட்டான்.

“வேதாந்திகள் கையில்தான் இருக்கிறது. இருளின் பின் கிடப்பது என்ன என்பதை அவர்களால்தான் காண முடியும்!”

“அந்த வேதாந்திகள் யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நான் அவர்களைத் தேடிப் பார்த்து விட்டேன். அவர்கள் உலகத்தின் இருளைப் போக்குவதற்குத் தங்கள் படுக்கையை விட்டு வெளியில் எழுந்து வருவதாகவே தெரியவில்லை. அப்படியே வெளியில் வந்தாலும் ஒரு பழைய கதையைச் சொல்லிவிட்டு மறுபடியும் தூங்கப் போய்விடுகிறார்கள். “அவர்களால் உலகுக்கு என்ன பயன்” என்று உமார் தொடர்ந்து கேள்வி கேட்டான். காசாலி பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்!


30. மாய இரவில் மயக்கும் மோகினி!

ஒரு விஷயத்தில் ஆயீஷா காசாலிக்கு நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருந்தாள். ஏனெனில், அவன் இருந்தவரை தான், மற்றவர்களும் அங்கு இருக்க முடிந்தது. அந்த இந்து வேதாந்தியின் பேச்சுக்களிலே ஆழ்ந்த கவனிப்புச் செலுத்திய உமார், மற்றவர்களைப் பற்றி இலட்சியம் செய்யவில்லை. ஆனால், அவன் விடைபெற்றுக் கொண்டு சென்ற பிறகு, மற்ற கூட்டாளிகளின் பேச்சு அவனுக்கு அலுப்புத் தட்டும்படி செய்தது. ஒரு நாள் மாலை, ஏதோ வேண்டாத விஷயத்தைப் பற்றிப் பிரமாதமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். உமாருக்குத் தலைவலி தாங்க முடியவில்லை. ஜபாரக்கினுடைய வெள்ளைக் கழுதையை நடுக் கூடத்துக்குள்ளே ஓட்டிக் கொண்டு வந்து, தன் நண்பர்கள் மத்தியிலே நிற்க வைத்தான். அவர்களெல்லாம் அவனுடைய பைத்தியக்காரச் செயலைப் பார்த்து வியந்து