பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

283

அகப்படாமல் காப்பாற்றப்பட்டன. எங்கள் தலைவர் அவற்றைக் கண்டுபிடித்தார். எங்களிடம் பூகோளப்படங்களும் இருக்கின்றன. அறிவுச் செல்வங்கள் பல எங்களிடம் இருக்கின்றன. பைசாண்டின் நகரைச்சேர்ந்த இரு பிரசாரகர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். தாங்கள் விரும்பினால் கிரேக்க நூல்களை அவர்கள் தங்களுக்குப் பாரசீகமொழியில் மொழிபெயர்த்துக் கொடுப்பார்கள்” என்று ரக்கின் உட்டின் கூறினான்.

பிளோட்டினஸ் எழுதிய நூலைக் கண்ட ஆச்சரியநிலையில் இருந்த போதும்கூட ரக்கின் உட்டின் பேசும் பொழுது முஸ்லிம்களை, அவர்கள் வேறு ஏதோ மதத்தைச்சேர்ந்த அந்நியர்கள் என்பதுபோல் பிரித்துப் பேசுவதைக் கவனித்தான் உமார்.

அவன் சிரித்துக்கொண்டே, “இது ஒரு பல்கலைக் கழகமா? அல்லது பாதுகாப்புக் கோட்டையா” என்று கேட்டான்.

“இரண்டும்தான்! இன்னும் சொல்லப்போனால் அதற்கு மேலும்கூட என்னலாம்! மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் எந்த விதமான எண்ணங்களும் இடையூறு செய்யாத முறையிலே இங்கு நாங்கள் அறிவைத் தேடுகிறோம். இதோ பாருங்கள்” என்று சொல்லிக் கொண்டே அந்தச் சிறிய பிரசாரகன் அங்கிருந்த நூல்கள் ஒவ்வொன்றையும் சுட்டிக் காண்பித்தான்.

“இதோ, இதுதான் அடையாள முறைக் கணிதநூல் அடுத்தது, மூன்றாவது டிகிரியின் சரியளவுக் கணித நூல், அடுத்திருப்பது கிரகண ஆராய்ச்சிகளின் தொகுப்புநூல், அதற்கும் அடுத்தது, உமார்கயாம் அவர்களின் வான ஆராய்ச்சி. எல்லாம் கிடைத்தற்கரிய புத்தகங்கள். நான் தங்களுடைய கணித நூல்களைப் படித்திருக்கிறேன். மற்ற நூல்கள் எல்லாம் என்னுடைய புரியுந்தன்மைக்கு அப்பாற்பட்டவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், எங்கள் தலைவர் இந்நூல்கள் அனைத்தையும் கற்றிருக்கிறார்.”

“உங்கள் தலைவர் ஷேக் அல்ஜெபலா, அனைத்தும் படித்திருக்கிறாரா?”