பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326


பிறகு அவன் புறாக்கூட்டை நோக்கிச் செல்லும்போது, “சேணம் பூட்டிய நல்ல குதிரை ஒன்று வேண்டும். சீக்கிரம், வேறொருவனை அனுப்பு” என்றான் உமார்.

குதிரை வரும் வரையிலே உமார் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவன் உள்ளம் பரபரத்துக் கொண்டிருந்தது. குதிரை வந்ததும், புறாக் கூண்டைத் தூக்கிக்கொண்டு வந்த அந்த மனிதன், “இதோ பாருங்கள் இந்தப் புறாக்களை அடையாளம் தெரிந்து கொள்வதற்காக உள் இறக்கை ஒன்று மடித்து வைக்கப் பட்டிருக்கிறது அதன் வால் புறத்திலே இதோ சிவப்புமை போடப் பட்டிருக்கிறது. இவைதான் மற்ற புறாக்களுக்கும் நமது புறாக்களுக்கும் உள்ள வேற்றுமை தாங்கள்...”

இப்படி அவள் கூறிக் கொண்டிருக்கும்போதே பின்னால் ஒரு குதிரை வரும் காலடிச் சத்தம் கேட்டது. ஏற்கெனவே பயந்து கொண்டிருந்த உமார், மிகவும் பயந்து தன் குதிரையைத் தட்டிவிட்டான்.

புறாக்கூண்டை அந்த மனிதன் கையிலிருந்து பறித்துக் கொண்டான், குதிரை பறந்தது. கிராமத்தின் நடுவிதி வழியாகச் சென்று கொண்டிருந்த அவன், ஆற்றுப் பக்கம் செல்லாமல், வலது பக்கம் செல்லும் பாதையில் தன் குதிரையைத் திருப்பிவிட்டான்.

ஆற்றுப் பக்கத்துப்பாதை வழியாகத்தான் அக்ரோனோஸ் அவனை அழைத்து வந்தான். அங்கே பாதி வழியிலே காவல்வீரர்கள் இருப்பார்கள். ஆனால், மற்றபாதை எங்கே செல்கிறதென்று அவனுக்குத் தெரியாது. எங்கு சென்றாலும், ஹாஸானுக்கும் தனக்கும் இடையே உள்ள தூரம் அதிகமாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வேகமாகச் சென்று கொண்டிருந்தான். ஒட்டகப்பாதை போல் தோன்றிய ஒரு சிறுபாதை வழியாகச் சென்று கொண்டிருந்த அவன் குறுகிய பள்ளத்தாக்கு ஒன்றின் வழியாகப் போகும்போது, கற்களுக்குப் பின்னாலிருந்து இருபுறமும் ஈட்டிகளுடன் கூடிய படைவீரர்கள் போன்ற மனிதர்கள் திடீரென்று தோன்றினார்கள்