உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

361


காவலர்கள் அவனை விரட்டினார்கள். இனித் திறக்கப் பட்டிருந்தாலும். அவன் உள்ளே நுழைய முடியாது. வெளியிலே கால்போன போக்கிலே நடந்து ஒரு கிராமத்திற்கு வந்தான். அங்கே ஒரு குடிசையிலே சிரிப்புச் சத்தம் கேட்டது.

உமார் சென்று கதவைத் தள்ளினான், அங்கே ஒரு சிறு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கின் வெளிச்சத்திலே சுவர் ஓரத்திலே அடுக்கியிருந்த சாடிகள் தெரிந்தன். கூடத்தின் மத்தியிலே ஓர் இளைஞன் வீணை வாசித்துக் கொண்டிருந்தான். முக்காடு போடாத ஒரு குடியானவப் பெண் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு இருந்தாள். ஒரு கிழவன், சாடியில் இருந்த மதுவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தான்.

“கவனம், சிந்திவிடாதே?” என்று கூறிக்கொண்டே உமார் அருகில் சென்றான். அந்த மதுப்பாத்திரத்தை வாங்கிச் சுவைத்துக் குடித்தான் உமார். மூன்று பேரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘ஐயா! வழி தவறிவிட்டீரா!?’ என்று கிழவன் கேட்டான்.

உமார், மதுச்சாடியின் அருகிலே நகர்ந்து உட்கார்ந்து கொண்டான்.

படிமம்:Page363 உமார் கயாம் (புதினம்).jpg

“இதோ பாருங்கள்! என்னோடு படுத்திருந்த மதம் என்ற மனைவியையும், கல்வி என்ற கண்ணாட்டியையும் மணவிலக்குச் செய்துவிட்டேன். திராட்சைக் கொடியாளின் மகள் மதுக்குட்டியை மறுமணம் செய்து கொண்டுவிட்டேன்” என்றான்.

‘விசித்திரமான பெயருள்ள பெண்கள்!’ என்று கூறி அந்தக் குடிபானவப் பெண் சிரித்தாள்.

‘சிரிக்கும் பெண்ணே வாய் திறந்து பாடு! இது போன்ற மணவிலக்கு என்றுமே