பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

நடக்காது!’ என்று சொல்லிவிட்டு மீண்டும் மதுவையூற்றிக் குடித்தான்.

குடித்துக் கொண்டிருந்தபடியே உமார் தூங்கிவிட்டான். விளக்கையணைத்துவிட்டுப் பாடிக் கொண்டிருந்த பெண்ணும் மற்றவர்களும் வீட்டின் மறு பகுதிக்குச் சென்று படுத்துத் தூங்கிவிட்டார்கள்.

இருட்டில் ஒருமுறை விழித்தெழுந்த உமார். மதுச்சாடியைக் கவிழ்த்துப் பார்த்தான். ஒரு சொட்டு மதுக்கூட இல்லை. மறுபடியும் கீழே விழுந்து படுத்துத் தூங்கிப் போனான்.


46. அடிமைப் பெண்ணின் ஆசைத் திட்டம்!

‘தொழுகைக்கு வாருங்கள்! தொழுகைக்கு வாருங்கள்’ என்று பள்ளிவாசல் கோபுரத்திலிருந்து கூவும் ஒலி கேட்டது.

அந்தக் கிழவன், உமாரை எழுப்பினான்.

‘ஐயா! விடிந்து விட்டது, தொழுகைக்குச் செல்லவேண்டும், எழுந்திருங்கள்’ என்றான்.

‘அவனைக் கவனிக்காதே! அவன் மறைவிடத்திலிருந்து உன்னைக் கூப்பிடுகிறான். கோபுரத்தின் மறைவிலிருந்து உன்னை அழைக்கிறான். மறைந்திருக்கும் ஆபத்துக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று கூறிவிட்டுத் திரும்பப் படுத்துக் கொண்டான்.

குடிப்பதும், தன் உள்ளத்திலே எரியும் தீயை மதுவால் அணைப்பதும், பேசுவதும், தூங்குவதுமாக அந்தக் குடிசையிலே பல நாட்களைக் கழித்தான். நாட்கள் ஓடுவதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை.

கவலையில்லாமல் குடித்துக் குடித்து நாட்களைப் போக்கிக் கொண்டிருந்த உமாருக்கு ஒருநாள் கவலைப்படும்படியான நிகழ்ச்சி ஏற்பட்டது. அயீஷாவும் இஷாக்கும் அவனைத் தேடிக்கொண்டு வந்திருந்தார்கள். அயீஷா கோபத்தோடு பேசினாள்.

‘இது என்ன பைத்தியக்காரத்தனம், எத்தனை வாரங்களாக உங்களைத் தேடுகிறோம்? உங்களுடைய விண்மீன் வீட்டை