பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

363

நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டார்கள். நிசாப்பூர் அரண்மனையைக் கடன்காரர்கள் கைவசப்படுத்திக் கொண்டு விட்டார்கள்!’ என்றாள்.

‘எல்லாம் நேற்று நடந்தசெய்தி, நெருப்பு எரிந்து தணிந்து, சாம்பலும் குளிர்ந்து போய்விட்டதே!’ என்று உமார் கவலையில்லாமல் பேசினான்.

காசர்குச்சிக் அரண்மனையையும் எடுத்துக்கொண்டு விட்டார்கள். புதிய சுல்தானுடைய சபையிலே உங்கள் பெயர் ஏளனத்துக்கு உரியதாகிவிட்டது. உங்களுடைய பஞ்சாங்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டுப் பழைய கணக்கை அமுல் நடத்துகிறார்கள்.’

‘என்ன, என்னுடைய பஞ்சாங்கத்தையா?’

‘ஆம்! அதை உதறித் தள்ளிவிட்டார்கள். பெண்கள் எங்கு கண்டாலும், என்னைப் பார்த்து, ‘அதோ’ பார்! ‘உமார்கயாமின் அடிமை’ என்கிறார்கள். கவிஞன் மூ இஸ்ஸியினுடைய வைப்பாட்டிகள் பல்லக்கிலே பவனி வருகிறார்கள். அவர்களுக்கு வேலை செய்ய எத்தனை அடிமைகள்.

எனக்கு, இந்த ஒரே குதிரையும், இஷாக்கும்தான் இருக்கிறார்கள். நீங்கள், இங்கே ஒரு குடியானவப் பெண்ணோடு குடியிலே புரளுகிறீர்கள்!’ என்று தன் குறைகளைக் கூறினாள்.

‘போதும், அயீஷா என் பெயருடன் சேர்த்து, இனிமேல் எந்தப் பெண்ணும் உன்னை ஏளனம் செய்ய வேண்டாம். இனிமேல், மூ இஸ்லியினுடைய மயில்களின் தோகைகள் உன்னுடைய கூந்தலைக் காட்டிலும் அழகாக இருக்கம் போவதில்லை என்று கூறிவிட்டு,

‘இஷாக், உன்னிடம் ஒரு பெட்டி நிறைய வெள்ளி நாணயங்கள் இருக்கின்றன அல்லவா?’

‘அதன் மதிப்பு அல்லா ஒருவனுக்குத்தான் தெரியும்’ என்று அயீஷா முணுமுணுத்தாள்.

‘அயீஷாவிடம், ஒரு இரும்புப்பெட்டி நிறையப் பொன்னும், மற்ற பொருள்களும் இருக்கின்றன அல்லவா?’ என்று கேட்டான்.