பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோற்றுவாய்

3

நிலைப்பள்ளியின்கண் அமைக்கவேண்டிய, நூலகத்தின் சிறப்பும் தேவையும் அங்கைச் செங்கனியென விளங்கும்.

பள்ளிநூலகத்தின் குறிக்கோள்கள் மிகப்பலவாம். அவற்றை நாம் உணர வேண்டுமானால் உயர்நிலைப்பள்ளிக் கல்வியின் குறிக்கோளை அறிதல்வேண்டும். அந்தக் குறிக்கோள் மூன்று வகைப்படும். அவற்றுள் மூன்றாவதாக உள்ள குறிக்கோள் நூலகத்தின் சிறப்பை உணர்த்த வல்லதாகும். அது வருமாறு :— ஒளியுடன் உள்ள ஒரு பண்பாடு உயிரோடு இலங்க வேண்டுமானல் அந்தப் பண்பாட்டையுடைய மக்கள் சொந்தமாக எண்ணவும் எண்ணியதைத் தெளிவாக எடுத்து உரைக்கவும் வல்லவர்களாக இருத்தல்வேண்டும். அத்தகைய ஆற்றலை ஒரு நாட்டு மக்களுக்கு அளிக்க வல்லவை இலக்கிய உணர்வு, கலைச்சுவை, பண்பாட்டுள்ளம் ஆகியவையாம்.

இத்தகைய உணர்வையும் சுவையுள்ளம் முதலியவற்றையும் பெற்ற மக்களே ஒரு நாட்டின் நன்மக்கள். அவர்களாலேயே நாட்டு அரசாங்கம் நலம் பெற முடியும். குடியாட்சி சீர் பெற வேண்டுமானல் இத்தகைய மக்களே அந்த நாட்டிலே நிரம்பியிருத்தல் வேண்டும். அத்தகைய அருமை மிக்க குடிமக்களைத் தோற்றுவிக்கும் நிலையமே உயர்நிலைப் பள்ளி. அதில் இன்று படிக்கும் மாணவர்களே நாட்டை நாளை ஆளப் போகும் குடி மக்கள். ஏனெனில், உயர்நிலைப்பள்ளிக் கல்வி முடித்தவர்களில் பெரும்பாலோர் அதன்பின் நேரடியாக வாழ்க்கையிலே இறங்கிவிடுவர். அதனால் அவர்களுக்கே முதலில் இலக்கியச் சுவையும், கலையுளமும் தரவல்ல கல்வி கற்பிக்கப்படல் வேண்டும். அதுவே உயர்நிலைப்பள்ளிக் கல்வியின் உயிர் போன்றதாகும். அத்தகைய கல்வியை யளிக்க வல்லது பள்ளி நூலகமே ஆகும். அதன் சிறப்பைப் பின்வரும் பகுதி நன்கு பேசும்.

“Accepting the principles implied in this new philosophy, that the fundamental aim of education is