பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

உயர்நிலைப்பள்ளி நூலகம்


3. பள்ளிநூலகத் தலைவருக்குரிய நூலக
அறிவு நுணுக்கம்


கீழ்வரும் தொழில்நுணுக்கத்தில் பேராற்றல் பெற விரும்பினல் அடிக்கடி அதனைச் செய்து பார்த்தல் வேண்டும்.

1.வகுத்தல். வகுத்தலின் தேவை. வகுக்காததின் தீமை. வகுத்தலின் முறையும் அதனைப் பின்பற்றும் வழியும்.

2.தொகுத்தல். பல வகையான தொகுத்தல் முறைகளின் காரணங்கள். குறிப்பிட்ட ஒன்றின் பொருட்டு நூற்பட்டியலைத் தயாரித்தல்.

3.நூல்கள் வழங்கல். பலவகையான வழங்கு முறைகள். அவற்றின் நன்மை தீமைகள்.

4.பலவகைப்பட்ட பேரேடுகள். அ. இருப்புப்பேரேடு:-பதிவேடும், நூல்தட்டேடும். ஆ. நூல் தந்த பேரேடு:- ஆண்டு முழுதும் கொடுத்து வாங்கிய நூற்பேரேடு.

5.நூலகத்தில் மேலும் ஒரு நூல் வைக்கும் முறை.

6.பருவ வெளியீடுகள், படங்கள், செய்தி நறுக்குகள் ஆகியவற்றைக்காத்தலும் வழங்குதலும்.

7.பொருட் செலவு. வரவின்வழி; வெளியீடுகள், பழுதுபார்த்தல், சேர்க்கை, பதிலுக்கு வைத்தல், ஆகியவற்றுக்குரிய பணம் வகுப்பு.