பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக ஆட்சி

71


அட்டையின் உட்புறத்திலும் ஒட்டப்பட்டிருக்கும். நூலைத்தரும்பொழுது நூல் பையிலுள்ள அட்டை எடுப்பாரின் சீட்டுப் பைக்குள் சென்றுவிடும்.

இந்த முறையினல் பல நன்மைகள் உள. இதனல் நூல் எடுத்தவர் பெயர், எடுக்கப்பட்ட நூலின் பெயர், எடுத்த தேதி, திரும்பும் தேதி ஆகிய அத்தனையும் எளிதில் தெரியும். மேலும் இதனல் நேரம் வீணகாது. நேரே நாம் நூலகத்துள் நுழைய வேண்டியது; விரும்பிய நூலை எடுக்க வேண்டியது; வாயிலுக்கு வரவேண்டியது; அங்கிருக்கும் நூலக அலுவலர் நூல் பையினுள் இருக்கும் சீட்டை எடுப்பார்; நாம் தரும் சீட்டுப் பைக்குள் பொறுத்துவார்; நாள் காட்டியில் திருப்பித் தரவேண்டிய நாளைக் குறிப்பார்; நாம் உடனே போய்விட வேண்டியது. எவ்வளவு விரைவு! திரும்ப நூல் தருகையில் சீட்டுப் பைக்குள் இருக்கும் அட்டை நூல் பையினுள் புகுந்து விடும். அவ்வளவுதான். இம் முறையில் நூல்களைக் கொடுத்து வாங்குவதினல் இன்றைக்கு எத்தினை நூல்கள் வெளியே சென்றுள்ளன என்பதை நூலகத்தலைவருக்கு நினைத்த நேரத்தில் அறிய வாய்ப்புண்டு. மேலும் இதனல் எடுத்து வைத்தல், வேண்டிய நேரத்தில் திரும்ப வாங்கல், நினைவுக் குறிப்பு அனுப்பல் ஆகியனவம் செய்தல் முடியும்.

நாம் ஒரு நூலைக் கேட்கும்பொழுது அது நூலகத்தில் இல்லை எனின், உடனே நாம் அதற்கென உரிய ஒரு தாளில் நூலின் பெயர், எண் முதலியவற்றைக் குறித்து, ஓர் அஞ்சல் அட்டையைத் தந்துவிட வேண்டும். நூல் வந்தவுடன் நாம் தந்த அஞ்சல் அட்டைமூலம் கேட்ட நூலே மூன்று நாளைக்குள் வந்து வாங்கிக் கொள்க என அழைப்பர். நாம் வரும்வரை அந்த நூல் அதற்கெனவுரிய அலமாரியில் காத்து நிற்கும். குறித்த காலத்தில்