பக்கம்:உயிரின் அழைப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10 "என்கண்ணே வந்தியாடி என்னம்மா! சுவாமிநாத சுவாமி என் வீட்டை விளங்கவச்சானா கடைசியில் ? சம்பந்தி அம்மா, குழந்தைகளை உக்காத்தி வச்சு ஆரத்தி சுத்திக் கொட்டுங்கோ முதலில். சாமா, குழந்தை எப்படி ஒடுங்கிப் போயிருக்காள் பாரு ! கன்னமெல்லாம் ஒட்டி... பின்னலா, பூவா ஒண்ணும் இல்லாதே..." ஆயாச மேலீட்டால் மேலே பேசமுடியாமல் சிரமப்பட்டாள் ஞானாம்பாள். "ரொம்பப் பேசாதேம்மா, மூச்சு வாங்கிறது பார்! என்றான் சுவாமிநாதன். இனிமேல் எனக்கென்னடா ஒரு மாசத்திலே உடம்பு தேறிப் போயிடாதா ? தர்மு, ஆம்பிடையானைப் பார்த்தி யாடிம்மா உன்வேதனை விட்டது போ!" என்றாள் ஞானாம் பாள். சிரமத்தால் மூச்சு வாங்கியது. (6 தலை குனிந்தபடி, அம்மா, உங்கள் மனசு எனக்குத் தெரியும். உங்களைப் பார்க்கிறாப் போலே, ஊரிலே, தர்மாம் பிகை சன்னதியில் அவளைப் பார்த்து உங்களைப்பார்த்த மாதிரி மனசை சமாதானம் செய்துகொள்வேன் !.......' என்றாள், கணவனைக் கடைக்கண்ணால் நோக்கியபடி. சுவாமிநாதன் அவளைப்பார்த்த பார்வை 'அடே அப்பா! எவ்வளவு பெரியபொய் ! பொழுதெல்லாம், தங்கள் நினைவு தான் தங்களை அடையத் தவம் செய்கிறேன், தங்கள் நினைவே தாரகம் என்றெல்லாம் புளுகினாயே கடிதத்தில்' என்ற கேள்வி போட்டது! ஆயாசத்தால் ஞானாம்பாள் கண்களை மூடிக்கொண்டாள். வாலாம்பாள், கோலம் போட்டு மணையைத்தேடிக் கொண் டிருந்தாள். நாகசாமி வாசலைப் பார்க்கச் சென்றார். சுவாமிநாதனும், தர்முவும் தனித்து நின்றார்கள். பரஸ் பரம் அவர்கள் பரிமாறிக்கொண்ட பார்வைக்குப் பொருள் கூற வார்த்தைகள் ஏது?