பக்கம்:உயிரின் அழைப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

அங்கே - திருவையாற்றிலே, அன்னை தர்மசம்வர்த்தனி தனது கடமையைத் தீர்த்துவிட்ட பெருமையுடன் புன்னகை பூத்து மந்தகாச முகத்துடன் நின்றாள்! பக்தன் பரஞ்சோதிக்கு மட்டில்லா ஆனந்தம்! "அம்மா, என்னைப் பெத்தாளே, பழி ஏத்துக்காம, அந்தப் பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தியோ, பொழைச்சயோ! இல்லை-இந்த பர தேசிப் பயக்கட்டை இந்நேரம் உன்னை சவிச்சிக்கிட்டு உசிரை விட்டிருக்குமே” என்றான் பூரிப்புடன் ! அம்மையின் அருள் முகத்தை, தீபவொளியில் உற்றுப் பார்த்துக் கொண்டு மெய்மறந்து நின்றான் பரஞ்சோதி!