பக்கம்:உயிரின் அழைப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


"அதிகப்பிரசங்கி! பேசாமலிருடா! பெரியவா, பெருந்தலைன்னு இல்லை?" என்று அதட்டி அடக்கப்பார்த்தார் பணக்கார மாமா.

"பெரியவர்களாக, நீங்களும், அவர்களும் இருங்கள். நீ கட்டம்மா மூட்டையை, அவர்கள் பெண்வரும்; அவர்கள் கொடுத்த சீரும் வரட்டும்" என்றான் சுவாமிநாதன் முறைப்பாக.

"கிடக்கிறது விட்டுப்பிடியுங்கள்! புதுமாப்பிள்ளை முறுக்கு! ஆறாமாசம், தீபாவளி என்று இரண்டு நடை வேட்டகம் வந்தால், தன்னால் சரியாகப் போய்விடும்" என்று சமரசம் பேசினார் அவர்.

கோபம் தாளாமல் மாடிக்குப் போய்விடடான் சுவாமி நாதன்.

பிரணதார்த்தி மிடுக்குடன் திரும்பிப் புறப்பட்டவாறு, "என்னவோ, எல்லோருமாக யோசனை பண்ணி பிள்ளையாண்டானுக்குப் புத்தி சொல்லுங்கள். மாப்பிள்ளை மட்டுமாக நான் இருக்கச் சொல்லவில்லை. திருவையாறு க்ஷேத்திர வாசமாச்சே, வயசு காலத்தில் நீங்கள் ஹாய்யாக சிவதரிசனம் பண்ணிண்டு இருக்கலாம். இதுவும் உங்கள் வீடாகப்பாவித்துக் கொண்டால் தப்பே தெரியாது ! என்ன நான் சொல்றது?" என்றார்.

"போய் யோசனை பண்ணி எழுதுகிறோம். சுபமாக குழந்தை இப்போது எங்களோடு வரட்டும். அவன் மனசுக்கும் சித்தே ஆறுதலாக இருக்கும்... "

"ஆகா, நீங்கள் புறப்படுங்கள். பின்னாலேயே நாங்கள் தர்முவை அழைச்சிண்டு வரோம் !... டேய் சந்த, தாம்பூலம், தேங்காய்க் கூடை எங்கேடா?” என்று அதட்டிக்கொண்டே வெளியேறினார் பிரணதார்த்தி.

அடுத்த பத்து நிமிஷங்களில் பிள்ளை வீட்டார்கள் புறப்பட்டார்கள். மணப்பெண் தர்மு, பிழிய பிழிய அழுது கொண்டு மாடி ஜன்னல் வழியாக மாமனார், மாமியார்.