பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா.வானமாமலை
9

திடீரென்று தோன்றுகின்றன. பாவிகளைச் சித்திரவதை செய்யும் நரகத்திலுள்ள புழுக்கள், அழுகும் பாவத்திலிருந்து தோன்றுகின்றன. பேய், பிசாசு உண்டென்ற நம்பிக்கையும் அக்யூனா எலிக்கு உண்டு. பூதகணங்களும், கணத் தலைவனும் உண்டென்றே அவர் நம்பினார். இதன் உயிருள்ளவற்றில் தோன்றி அவற்றையே உணவாகக் கொண்டு வாழும் நுண்ணுயிரிகள் கடவுளால் மட்டுமின்றி, பூதங்கள் பேய்களின் சாகஸங்களாலும் படைக்கப்படலாம் என்று அவர் வாதித்தார். இதன் காரணமாக பேய், பிசாசுகளை ஏவிவிடும் ஏவல்காரிகள் எலிகளையும், விஷப் பூச்சிகளையும் உண்டாக்கி பயிர்களை அழித்தார்கள் என்று நம்பினார். மத்திய காலத்தில் இக் "குற்றத்திற்காக” ஏராளமான ஏவல்காரிகளையும், சூன்யக்காரிகளையும் ஆட்சியாளர்கள் விசாரித்துத் தண்டித்தார். தாமஸ் அக்யூனாஸின் போதனைகளால் மேல்நாடுகளில் கிறிஸ்தவ மதஸ்தாபனங்கள், ‘தெய்வீக ஆவி ஏறிக்கொள்வதன் மூலம் உயிரற்ற பொருள்கள் உயிர்பெறும்" என்ற கொள்கையை உருவாக்கிப் பிரச்சாரம் செய்தன. இக்கொள்கையை கீழ்த்திசை நாட்டு கிறிஸ்தவ மத ஸ்தாபனங்களும் ஏற்றுக்கொண்டன. உதாரணமாக டிமிட்ரி என்ற ராஸ்டாவ் நகரத்தின் திருச்சபை அத்யட்சகர் நமக்கு அதிர்ச்சி தரும் வகையில் இக்கொள்கைக்கு உதாரணம் காட்டினார். “உலகத்தில் நோவா காலத்தில் ஒரு பிரளயம் தோன்றியது. அப்பொழுது அவன் தனது கப்பலில் சுண்டெலி, தேரை, தேள், சேவல், பாச்சா, கொசு முதலிய உயிரினங்களை ஏற்றிச் செல்லவில்லை. ஏனெனில் இவை சேற்றிலும், அழுகக் கூடிய பொருள்களிலும் இருந்து தோன்றியவை. இவையாவும் பிரளயத்தில் அழிந்தன. ஆனால் பின்பு, தமது உற்பத்தி ஸ்தானங்களிலிருந்து மீண்டும் தோன்றின ” என்று அவர் எழுதினார்.

பொருள்களின் படிப்படியான பரிணாமத்தோடு எவ்விதத் தொடர்புமில்லாமல் தெய்வத்தின் செயலால் உயிர்ப்


  • ரஷ்யாவில் பின்பற்றப்பட்ட கிரேக்கப் புராதன கிறிஸ்தவ மதம்.