பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா.வானமாமலை
29

தூசியுமே, நட்சத்திரமாக உருவாகின்றன வென்றும், அதன்பின் குறிப்பிட்ட முறையில் வளர்ச்சி பெறுகின்றனவென்றும் முடிவு செய்தார். ஆரம்பத்தில் நட்சத்திரம் தன் இயல்பான பரிமாணத்தைவிட மிகமிகப் பெரிதாயிருக்கும். அது சரியாக உருவாகும்போது கட்டியாக உறைகிறது. உறைந்த பின்னும், அதைச் சுற்றி வாயுவும், தூசியும் ஒர் உறை போல மூடிக்கொண்டிருக்கும். (இவற்றால்தான் நட்சத்திரம் உருவாக்கப்பட்டது.) நட்சத்திரங்கள் தோன்றிய வரலாற்றைத் தெரிந்து கொள்ளுவதைவிட, கிரகங்களும் உலகமும் தோன்றிய வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது நமது ஆராய்ச்சிக்கு அவசியம். ஏனெனில் நமது உலகம் ஒரு கிரகம். ஒ. ஜே. ஷிமிட்டின் அனுமானங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம். ஒ.ஜே. ஷிமிட்டின் முடிவுகள் யாவை? சூரிய மண்டலத்திலுள்ள பூமியும், வேறு கிரகங்களும், சூரியனது பாகமாயிருந்த வாயுக்களிலிருந்து உண்டானவையல்ல. (சூரியனிலிருந்து தெறித்து விழுந்தவைதாம் கிரகங்களென்று விஞ்ஞானிகள் கருதிவந்தார்கள்) பல கோடி வருஷங்களுக்கு முன், சூரிய பாட்டையில் சுற்றிவரும் சூரியன் பொடியான பொருள்களாக்கப்பட்டு குளிர்ந்த தூசிப் படலத்தோடு மோதிக் கொண்டது. அத்தூசி மண்டலத்தை தன் கவர்ச்சி வட்டத்துக்குள் இழுத்துக்கொண்டது. படிப்படியாக, பொருள் குவியும் மையங்கள் தோன்றி, தூசியும் வாயுவும் குளிர்ந்து இக்கிரகம் தோன்றியது. சூரியன், வாயுவும், தூசியும் கலந்த பிரம்மாண்டமான மேகத்துக்குள் நுழைவதும், அதனை இழுத்துக்கொள்வதும் மிகவும் சிக்கலானதாகத் தோன்றுகிறது. நவீன ஆராய்ச்சிகள் தரும் புதிய விவரங்களைக் கொண்டு கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்பது சாத்தியமாகிறது. பொருள்களின் கவர்ச்சி அவசிய