பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



28
உயிரின் தோற்றம்

ஜே.ஷிமிட் முதலியோர்) செய்துவந்த சிறந்த ஆராய்ச்சிகளின் மூலம் நட்சத்திரங்களின் தோற்றத்தைப் பற்றியும், கிரக வரிசைகளைப் பற்றியும் புதிய உண்மைகள் வெளியாயின. உலகத்தில் சேதனப் பொருள்கள் தோன்றிய விதத்தையும் விளக்க இவ்வுண்மைகள் பெரிதும்துணை புரிகின்றன. அல்மா அடா என்ற நகரில் மிகவும் சக்தி வாய்ந்த தூரதரிசினி செய்யப்பட்டு உபயோகத்துக்கு வந்தது. நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள இடைவெளியில் என்ன பொருள்கள் உள்ளன, அதன் அமைப்பு என்ன என்பதை அறிய இக்கருவி உதவிற்று. அக்கருவியை நிறுவுவதற்கு முன் இவ்விடை வெளியைப் பற்றி விஞ்ஞானிகள் அதிகமாக ஆராய்ச்சி செய்ததில்லை. நட்சத்திர மண்டலத்திலுள்ள நட்சத்திரங்களிலும், கிரகங்களிலும் மட்டுமல்லாமல், இடைவெளியிலும் பொருள்கள் இருக்கின்றன. இவ்விடைவெளி சூன்யமாக இல்லை. வாயுவோ, தூசியோ அதனுள் இருக்கிறது என்று நவீன விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. இவ்விடைவெளியிலுள்ள பொருள்கள் சில சமயம் மிகப் பெரிய மேகங்கள் போல உருவெடுக்கின்றன. இதைத் தூரதரிசினியின் மூலமாக அல்லாமல் கண்ணாலேயே காணலாம். “பால்வழி” என்று அழைக்கப்படும் (Milkway) நட்சத்திரக் கூட்டத்தில் கருமையான புள்ளிகள் காணப்படுகின்றன. அவை இத்தகைய மேகங்களே. பழங்கால மக்கள் இப்புள்ளிகளைக் கவனித்து, அவற்றிற்கு கரி மூடை என்று பெயரிட்டார்கள். பால்வழியிலுள்ள இக்கருமேகங்கள் அவற்றிற்குப் பின்னாலுள்ள நட்சத்திர ஒளியின் ஒரு பகுதியைப் பூமிக்கு வரவிடாமல் தடுக்கின்றன. நட்சத்திர மண்டல இடைவெளியை ஆராய்ந்ததில் சில இடங்களில் அவை நார் போன்ற அமைப்புள்ளனவாகத் தெரிகின்றன. விஞ்ஞானக் கழக அங்கத்தினர், எப்.ஜி. வெஸன்காவ், இவ்விடைவெளிகளைக் குறித்து ஆராய்ந்தார்; நூல் அல்லது நார் போன்ற இவ்வாயுப் பொருள்களும்,