பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்தியாயம் 5
புரோட்டோபிளாசத்தின் அமைப்பு

பொருள்களின் பரிணாமத்தைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள, உயிருள்ள பொருள்களின் அடிப்படைப்பகுதியான புரோட்டோபிளாசத்தின் அமைப்பைப்பற்றிச் சிறிதளவாவது நாம் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலும் உயிருள்ளன யாவும் மிகவும் சிக்கலான அமைப்புடைய உயிருடைய இயந்திரங்கள் என்று விஞ்ஞானிகள் நம்பினர். புரோட்டோபிளாசம், ஒளிக்கதிர்களைப் போன்ற ‘கயிறு’களால் இணைக்கப்பட்ட திடப்பொருள் என்று அவர்கள் விளக்கினர். இயந்திரத்தின் வேலை சக்கரங்கள், அசையும் தண்டுகள் இவைப் பொருத்தப்பட்டுள்ள அமைப்பைப் பொறுத்திருப்பதுபோல புரோட்டோ பிளாசத்திலும் அதன் பகுதிகள் பரஸ்பரம் தொடர்பு படுத்தப்பட்டிருக்கும் விதமே உயிரின் சிறப்பான தன்மையென்றும் புரோட்டோபிளாசத்தின் அமைப்பைக்குறித்த ஆராய்ச்சிகளின் மூலம் அதனை நன்றாக அறிந்து கொண்டால் உயிரின் ரகசியத்தை அறிந்துகொள்ளலாம் என்று அவர்கள் கருதினர்.

இத்தகைய யாந்திரீகமான கண்ணோட்டம் தவறென்பதை செயல்முறை ஆராய்ச்சி நிரூபித்தது. மிகவும் சிக்கலான அமைப்புடைய இயந்திரத்தோடுகூட புரோட்டோபிளாசத்தை ஒப்பிடுவது தவறாகும். ஏனெனில் அதில் அத்தகைய அமைப்பு இல்லை புரோட்டோபிளாசத்தில் உள்ள பொருள்கள் திரவநிலையிலுள்ள பொருள்களாகும். புரதங்க்ள், கொழுப்புகள் போன்ற உயர்ந்த அணுக்கூட்டு எடையுள்ள