பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





ஊர்வனவற்றின் காலம்

ஆறுகோடி ஆண்டுகளுக்கு முன் முடிந்த காலத்தில் மரங்கள், பூக்கள், செடிகள் முதலியன உலகில் தோன்றின. இன்றிருக்கும் செடி, கொடிகளுக்கும், மரங்களுக்கும் அவை மூதாதைகள், ஊர்வன மிகவும் வளர்ச்சியுற்ற காலம் அதுதான். இக்கால முடிவில் அவை கூட்டம் கூட்டமாக அழிந்துபோயின. அவை பெருகியிருந்த காலத்தில் அவை

நீரிலும், நிலத்திலும் வாழ்ந்தன காற்றில் பறந்தன. டினோசர் என்ற பிராணியினத்தில் பல வகைகளிருந்தன, பின்னங்கால்களால் நடந்தவை சில. (2-ம்) டிராகோடார்ன், மாமிசபட்சணியான டினோசர், அழிந்துபோன சிறு டைனோசார், கொம்புள்ள டிரிசிராடாப் என்னும் பிராணி நான்குகால்களால் ஊர்ந்து சென்றது. பறந்துசெல்லும் ‘டிராகன்’ என்னும் மிருகங்களும் இருந்தன. பல ஊர்வன கடல்களில் நீந்தின. ஊர்வனவற்றின் வழித்தோன்றல்களான பறவைகளும், பிராணிகளும் தோன்ற ஆரம்பித்தன.