பக்கம்:உயிரில் கலந்தது.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#02

முதன் முதலில் பதவிசாகவும் அமரிக்கையுடனும் காற் பெருவிரல் நகம் தரையில் கோடுகிறுக்கி, பார்த்தும் பார்க்கா மலும் நாணத்திற்கு வாரிசு நான்தான்’ என்கிருற்போன்று “கம் மென்று இருக்கை கொண்டிருந்த பெண்ணு இப்பொழுது இப்படி பாம்பு சீறுகிற பாவனையுடன் வார்த்தைகளைக் கொட்டுகிருள்? கழுத்தை ஒரு சமயம் தோட்டம் பார்த்த அந்தரங்கச் செயல் அவர் நெஞ்சில் குறுகுறுத்தது. கருகுமணிச் சரம் மட்டிலுமே அவனது சிவந்த மேனிக்கு அணிகலன் ஆன உண்:ைஇேனயும் அவரால் காணமுடித்தது,

பெண்ணுக்கு, அழகுதான் நிதி, ஆளுல் அவ்வழகே சமயர் சமயங்களில் அவளுக்கு விபத்தாகவும் உருமாறக்கூடும். அப் படிப்பட்ட அழகும் விபத்தும் ஒன்றுகூடி, தற்போது தன்னே ஆட்டிப் படைத்து அக்பலத்தில் நிறுத்தக் கங்கணம் கட்டி யிருப்பது மாதிரியாகப் பட்டது ஞானசீலனுக்கு. வாழ்க்கை கூட ஒருவித விபத்துத்தானே? அவரவர் வாழ்வு எப்படிப்பட் இக்கட்டுக்களே சமாளிக்க வேண்டுமென்று விதித்திருக்கிறதோ அவற்றையெல்லாம் சந்தித்துத்தானே ஆக வேண்டும்? இதற் கெல்லாம் வருந்தலாமா? துன்பத்தையே இன்பமாக கருத வேண்டும் என்பது தமிழ் வேதத்தின் வாக்கு. முடிய வேண்டாமா?

கூடத்திலிருந்த அலாரம் டைம்பீஸ் துடித்த துடிப்பு அவருக்குக் கேட்டது. -

அவள் துடித்த துடிப்பும் அவருக்குக் கேட்டது. அவளே அவர் விழிநிமிர்த்தி நோக்கினர். அவள் இதழ்கள் வண்டின் ஸ்பரிசம் பட்டதுபோல சிலிர்த்ததை அவர் உணர்ந்தார். -

மணி பன்னிரண்டு; கச்சிதம். #வானியை இன்னும் காணுேமே? என்று எண்ணமிட் டார். அது சமயம், “என்நெஞ்சை உங்களுக்கு வெகு விரை வில் திறந்து காட்டுவதாக முன்பொரு சமயம் சொன்னே னல்லவா, அதற்காகவேதான் இப்பொழுது என் ஆண்டவணை