பக்கம்:உயிரில் கலந்தது.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii i

அதற்குப் பின்னேயும்-அதாவது, அந்தச் சரித்திரத்திற்குச் சரித்திரம் போலவும் சில ரகசியங்கள் மறைந்திருப்பதைத் தாங்கள் அறிந்திருக்க முடியாது. நான் இந்த விந்தை மண்ணில் கண்விழித்தபோது, தாய் தந்தையற்ற அகுதை யாகவே கண்விழித்திருக்கிறேன். நெறி பிறழ்ந்த முறையில் கருவில் உருப்பெற்ற என்னை ஈன்றுபோட்டுவிட்டு அன்னை மறைத்தாள், மறைந்திட்ட அவள் கணவனே நாடி, அளுதைக் குழந்தையான என்னைக் கண்டெடுத்திருக்கிறார் ஒரு தெய்வ மனிதர். அந்த மனிததெய்வம் யார், தெரியுமா? அவரே தான் தவசீலியின் அப்பா. அந் நாளிலே பெரிய லட்சாதிபதியாகத் திகழ்ந்த அவர், என்னை அங்கு அலுவல் செய்து கொண்டிருத்த கோதண்டபாணியிடம் ஒப்படைத்திருக்கிரு தான் வளர்ந் தேன், என்னுள்ளே-என்னுடன் வளர்ந்து கொண்டேயிருந்த பிறப்புக் கதை'யை அறியாமலே! எல்லா விஷயமும். இப் போதுதான், அதாவது, தவசீவி இங்கு வந்து சேர்ந்த சில தினம் முன்னர்தான் எனக்குத் தெரிந்தது; பூனிமான் கோதண்டபாணி என் வளர்ப்புத் தந்தைதான் என்ற ரகசி யத்தை அறிந்திருந்த எனக்கு என் பிறப்பு விந்தை மட்டும் எப்படியோ தெரியாமலே இருந்துவிட்டது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் விட்டகுறை-தொட்டகுறையின் ஊட்டத்தினல் தான் விளையாடுகின்றன. ஆகவே, இவற்றின் அலகிலா விளையாட்டுக்கு முன்னே கேவலம், மானுடப் பிறப்புக்களின் அற்பவிளையாட்டுகள் எம்மாத்திரம்? - -

வாணி சில கணங்களின் ஒய்வுக்குப் பின்னே, தவசீலியை உன்னிப்புடன் பார்த்து, நாசூக்கான அன்பு மிளிரச் சிரித்து விட்டு, ஞானசீலனைப் பார்க்காமலேயே தன் கதையைத் தொடரலாஞள்: - -

“ஸார், கேளுங்கள்: நீங்களும் நானும் காதலிக்கத் தொடங்கி-அதாவது ஒருவரையொருவர் மனமார விரும்பத் தொடங்கியதற்கு முன்னதாகவே, என் தவசீலி உங்களை மான சீகமாகக் காதலிக்கத் தொடங்கியிருக்கிருள், ஸார்! உங்கள் எழுத்துக்களையே ஆசாளுக்கி, உங்கள் புகைப்படத்தைப்