பக்கம்:உயிரில் கலந்தது.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i iO

தெய்வமே! வாணி நினைவுப் பூக்களை மன நாரில் சிந்தனைக் கரம் தொடுத்துக் கொண்டிருக்க, அந்த இடைவேளையில், அவர் நோக்கு வாணியின் டைரிக் குறிப்பில் இழைந்தது: “நன்றி சுரக்கும் நெஞ்சோடு நான் அல்லும் அறுபது நாழிகையும் என்னுடைய அடிநாட்களை ஞாபகப்படுத்தியவாறு தான் இருந்து வருகிறேன். இந்த ஒரு பரிபக்குவம் எனக்கு அப்பியாசப்பட்ட காரணத்தினுல்தான், என்னுள்ளே, என்னையும் அறி யாமல், ஒரு தியாகமனம் உருவாகிப் பக்குவப்பட்டு வருவதைக் காண்கிறேன். ஏனென்றால், என் நிமித்தம் பல பல தியாகங்களைச் செய்தவர்களுக்கு நான் நன்றிக் கடன் செலுத்தியே ஆகவேனும். அந்தச் சந்தர்ப்பத்தை ஆண்டவன் எப்போதும்எந்த ரூபத்தில் எ ன க் கு அறிமுகப்படுத்தப் போகிருனே? நான் எப்படி உணர முடியும்? நான் அபலே! அதிலும் கன்னி ஆக, என் கடனை பூர்த்தி செய்துதான் தீருவேன். இல்லாது போனல், நான் என் மனச்சாட்சிக்கு மட்டுமில்லாமல், தெய்வ மறையாம் திருக்குறளுக்கும் அநீதி இழைத்தவள் ஆவேன்!...” கொடுத்ததை படித்து முடித்துச் சும்மா இருந்தார் ஞானசீலன்.

“ஆசிரியர் லார்! நீங்கள் உங்கள் எழுத்துக்களிலே அடிக்கடி குறிப்பிடுகிற அந்தத் தியாகப் பண்பு என்றாே என் னுள் வளர்ந்து, உதிரத்துடன் உதிரமாகி விட்டது. அதற்கும் காரணம் இருக்கிறது. கவனமாகக் கேட்பீர்களா? உங்கள் நெஞ்சில் நான் நர்த்தனமிடுவதாகச் சதா வேடிக்கையாகப் பேசுவீர்களே? அந்த வாணியை மறந்துவிட்டு, இந்த வாணி யின் பேச்சைச் செவிசாய்ப்பீர்களா? நான் ஆடம்பரமில்லாத அழகி என்ற அளவிலும், பூரீமான் கோதண்டபாணி அவர் களின் அருமைத் திருமகள் என்ற அமைப்பிலும் மட்டுமே: தான் தாங்கள் என் சரித்திரத்தை அறிவீர்கள். ஆனல்,