பக்கம்:உயிரில் கலந்தது.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


களையும், நெஞ்சை ஈர்க்கும் அற்புதமான முனைத்திருப்பங் களையும் மீண்டும் மனத்திற்குள்ளாக சன்னக்குரல் எடுத்துப் படித்து ரசிக்கும் சமயத்தில், அவரையும் அறியாத வகையில், அவரது மனம் ஆனந்தக் கடலாடுவது வழக்கம். அப்படிப் பட்டதொரு தனித்த மனப்பாங்கு எப்போதாவதுதான் அவருள் உருக்கொள்ளும். அவ்விதமான மனச் சந்துஸ்டி, அன்று அலுவலகத்திற்கு அவர் பெயருக்கு எழுதிய, முன்பின் அறிமுகமற்ற அந்தக் கதாசிரியையின் கடிதத்தைப் படித்த பொது முதல் முறையாக ஏற்பட்டது. அதே வகைப்பட்ட உள்ளத்துள்ளல் இப்போது அடுத்தபடியாக அவர் நெஞ்சத்தில் முகிழ்த்தெழுந்தது.

“என் பெயர் தவசீலி!” என்று பான்மையுடன் பாங்கு மொழி உதிர்த்த பாவனையைப் புகழ்வதா?

‘நீங்கள்தான் ஞானசீலன்: தமிழரசி’ பத்திரிகையின் உதவி ஆசிரியரென்று கருதுகிறேன்,” என்பதாகத் துணிவு பதித்து, புதுமனையில் பஞ்சுப்பாதம் பதித்துப் பேசிய மோகன மான லாகவத்தைப் போற்றுவதா?

“ வணக்கம்,” என்று அஞ்சலி முத்திரை காட்டி, அஞ்சனமணி வண்ணக் கண்களிலே அஞ்சாத பாவத்தை எழுதிக்காட்டி, பண்புடன் நகை சிந்தினளே, அந்தக் கோலத்தின் கோலாகலமான தொடர்பைப் பாராட்டுவதா? மூன்று பிரிவுக் கேள்விகளுக்கும் உரைகல்லாக நிலவி .நின்ற தவசீலியின் அழகு, அன்பு, துணிவு என்கிற மூன்று வகைக் குணநலக் கோணங்களை மாற்றுரைத்துப் பார்க்க அவருக்குப் பொழுது காணவில்லை. நேருக்கு நேர் பார்த்த நிதர்சன வடிவம் ஏதோ ஒன்றை நினைவூட்ட, அந் நினைவு, பட்டனத்தில் பறந்து வந்த கடிதத்தைத் தொட்டு நின்றது. உள்ளந்தொட்ட முடங்கலல்லவா அது? முடங்கிக் கிடந்த இனிய நல்லுணர்வின் தேக்கத்தலமாக அமைந்த அக்கடிதம், அவருடைய நெஞ்சத்தில் மீளவும் ஒருமுறை பிரதிபலித்தது. அமீள வாய்க்காத அன்புச் சுழல் தன்னை ஆட்கெர்ண்டுவிட்டாற்