பக்கம்:உயிரில் கலந்தது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


இல்லை. இவை யெல்லாம் இருந்த இடத்தில் வேதனை இருந்தது; வெய்துயிர்ப்பு இருந்தது; ஆற்றாமை இருந்தது

பெண்மையின் கண்ணிர் எழுத்தாளரைச் சுண்டி இழுத்தது.

‘தவசீலி, உங்களை எனக்கு நிரம்பவும் பிடித்து விட்டது!’ “அப்படியா? நிஜமாவா லார் ஆஹா, நான் பாக்கிய வதிதான்! என்னைப்போல அதிர்ஷ்டம் கெட்டவள் இந்த உலகத்திலேயே யாருமில்லை என்றிருந்தேன், அது தப்புங்க. என்னைப்போல அதிர்ஷ்டம் உள்ளவ இப்ப யாருமே இருக்க முடியாதுங்க. அப்படியான, என் கதைகள் உங்க மனசுக்குப் பிடிச்சிருக்குதா? உடனேயே எனக்கு வேலை கொடுப்பீங்க, இல்லயா?” என்று ஆர்வம் கொப்புளித்த நெஞ்சை வெளிக் காட்டிப் பேசிளுள். மேலாக்குச் சேலைத் தலைப்பை இழுத்து மூடிக்கொண்டே, நெற்றியில் புரண்ட கார்குழலை ஒதுக்கி விட்டாள்.

ஞானசீலனின் விழிகள் அசந்துபோய் விட்டன. அரைக் கணச் சிந்தனைத் தவிப்பு மாறியது. ‘தவசீலி, நீங்க என்ன வெல்லாமோ சொல்லுநீங்களே? என்ன சமாச்சாரம்? புரியும்படி சொன்னுல்தானே எனக்கும் புரியும்?” என்றார்.

அவளுக்குத் தேள் கொட்டிற்ை போலிருந்தது. ‘என்ன ஆசிரியர் ஸார் இப்படிக் கேட்கிறீங்க? அப்படியானு, என் லுடைய தபால் ஒன்று சென்னைக்கு உங்கள் பத்திரிகை ஆபீசுக்கு வரலையா?...’ என்று வினவினுள்.

  • இல்லையே!” என்று முகத்தைக் கவிழ்த்தவாறு பதிலி றுத்தார் துணை ஆசிரியர். “என்ன சேதி!”

“சேதி இதுதான்!” என்று கூறி முடித்துவிட்டு, பிறகு, கையுடன் கொண்டு வந்திருந்த கடிதத்தை நீட்டினுள்.

மேலெழுந்த வாரியாகப் படிக்காமல், உள்ளழுந்திப் பார்த்தார் அவர். ‘என்னலானதைச் செய்கிறேன். நான் பட்டணம் போனகையோடு உங்களுக்கு விவரமாக லெட்டர் எழுதுகிறேன், என்றார்.