பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ வதைபடும்... 104 ஒருநாள் வேலையையும் கூலியையும் முடக்கிக் கொள்வதற்கும் இயலாது. ஒரு பெட்டி தேய்க்கிற தொழிலாளி, காலையில் இருந்து மாலை - ஏன் இரவு வரையிலும் தெருவிளக்கு வெளிச்சத்தில் நின்று வேலை செய்கிறான். அன்றாடம் கிடைக்கும் கூலியில் வட்டிக் கடனடைத்து, பெண்டு பிள்ளை காப்பாற்றி, சேமிக்கவோ, விடு வாசல் வாங்கவோ திருமணம் செய்யவோ கனவுகூடக் கான முடியாது. காலையில் இருந்து நிற்பதற்காகவே நூறு, இருநூறு மில்லி ஊற்றிக்கொண்டு வருகிறான். குடல் புண், வயிற்றுப் புண் என்று நோயாளியாகிறான். பெண்டாட்டி இவனைக் கூட்டிச் சென்று, யாரேனும் டாக்டரிடம் இப்போதெல்லாம் சித்த மருத்துவம், ஓமியோபதி என்று மாற்று மருத்துவர்களும் மருத்துவம் செய்கிறார்கள். இவர்கள் அவர்களைப் போல் தொட்டுப் பார்க்கவே பணம் பிடுங்குவதில்லை. ஆனால், மருந்துகள் விலை உயர்ந்திருக்கும். சில நாட்கள் செல்லும். பத்திய உணவு வேண்டும். வறுமை, அவன் உடலுக்குத் தேவையான சமச்சீர் உணவு இல்லாத நிலையில் குடி சமுதாய வளங்களை உறிஞ்சுகிறது. இதையெல்லாம் மனதில் எண்ணியே, 1937 லேயே அன்றைய ராஜாஜி, ஏழை உழவர்களைக் கட்குடியிலிருந்து மாற்ற சேலத்தில் மதுவிலக்கு என்ற ஒன்றை நெறிப்படுத்தினார். காங்கிரஸ் ஆட்சியின் முதல் கொள்கையே மதுவிலக்காக இருந்தது. ஆனால், அன்றே காந்திய நெறிகள்துக்கி எறியப்பட்டன. அரசு விருந்துகள் என்ற ஒன்றுக்கே இடம் இருக்கலாகாது என்ற கோட்பாடு எங்கே? தலைநகரில் அன்றாடம் வெளிநாட்டு விருந்தினர் வரும்போது விருந்துபசாரம் செய்ய வேண்டாமா? அந்நாட்களில் 'டோஸ்ட்” டுக்குத் துளசி நீர் வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு காந்தியத் தலைவர்கடறியதைக் கேலிக் குரலில் பத்திரிகைகள் கிண்டலடித்தன. மதுவினால் வரும் இழப்பைச் சரிகட்ட, ராஜாஜி அந்நாள் விற்பனைவரியைக் கொண்டு வந்தார். தலைவர்கள் எவர்களும் ஒழுக்க நெறிக்கான காவலர்களாக இல்லை. மதுவும் 25 ஆண்டுக் காலத்தில் திரும்பி வந்தது. விற்பனைவரியும் குட்டிகள் போட்டுப் பெருகியிருக்கிறது. இந்நாட்களில் இளம் பெண்கள் அந்நிய நாட்டுக்கான சேவைக்கூலிகளாக இரவுகளில் வேலை செய்கிறார்கள். மதுவருந்துவதும் புகைப்பிடிப்பதும் எங்களுக்கும் அழுத்தங்கள் குறையத் தேவையாக இருக்கின்றன என்று அவர்களில் ஒரு சாரார் நியாயம் செய்துகொள்கிறார்கள்.