பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ இருத்தலுக்கானr... 114 கருக்கலைப்பு என்பது அவ்வளவு எளிதானதா? இதுபோன்ற, பெண்களின் வாழ்க்கையோடு தொடர்பான உண்மைகள், தொலைக்காட்சிப் பொழுதுபோக்குத் தொடர்கள் என்ற பெயரில் கொச்சைப்படுத்தப்படுவது எந்த விதத்தில் சரியானது? குழந்தைப் பேறு என்பது, ஆணும், பெண்ணும் இணைந்து கருத்தொருமித்துத் தீர்மானிக்கப்பட வேண்டியதாகும். புருஷ னுடன் வாழும் ஒரு குடும்பப் பெண் அவனுக்குத் தெரியாமல் கருக் கலைப்புச் செய்துகொள்கிறாள் என்றால், அவள் வாழ்க்கையே அந்தரத்தில் ஊசலாடுவதுபோல் சமூகம் அவளை விபசாரி என்று ஒதுக்காதா? பணம் பறிப்பதற்காக மருத்துவமனைச் செவிலி ஒரு ஊசிக்கு ஆயிரமாயிரம் விலைபேசுவதும் கருக்கலைப்பு என்று சொல்வதும் எந்த வகையில் நம்பகமானது என்று தொழில் முனை வோராகத் தன் திறமையை வெளிக்காட்டும் பெண் சிந்திக்க மாட்டாளா? இப்படியெல்லாம் கொக்கிகளை வைக்கவே, இது கதைக் கூறாகப் புகுத்தப்படுகிறது. ஏனெனில் இந்த முடிவுக்கு எந்த விதமாகத் திருப்பம் அமையப்போகிறதென்பதில், தொலைக் காட்சித் தொடரைப் பார்ப்பவர்கள் ஆவல் கொள்வார்கள். அது இப்படியும் இருக்கலாம். கணவனுக்குச் செய்தி தெரிய, அவள் நடத்தையில் சந்தேகம் கொள்ளலாம். தன் திறமையை வெளிக்குக் கொண்டுவரும் முயற்சியில் கருப்பம் ஒரு முட்டுக்கட்டை என்று பொருளாதார சுதந்திரம் பெற்ற பெண், நவீனமான ஊசிமருந்தைப் போட்டுக் கொண்டிருக்கலாம்... நவீன நாயகியை, கணவனின் சந்தேக அச்சில் திணிப்பதற்கும் குடும்பம் அந்நியப்படுத்துவதற்கும் கதை களம் அமைக்கிறது. இந்தப் புதிய மருந்தைப் பற்றிய விவரங்களை இந்த நவீன நாயகி ஆய்வு செய்கிறாளா? அதுவும் இல்லை. இவருக்கு ஊசியின் விளைவால், குருதிப் பெருக்கு ஏற்படலாம். இவளால் வெளியிட முடியாத துன்பம் நேரிடலாம். அடுத்தடுத்து அந்த மருத்துவரிடம் சென்று பரிசீலனை செய்துகொள்ள இயலாத சிக்கலில் அகப்பட்டுக்கொள்ளலாம். செவிலி அஞ்சி, காணாமல் போகலாம். அல்லது கரு கலையாமல், நின்று ஊனமான குழந்தை பிறந்து வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வின் தண்டனையைாக வருத்தலாம். ஆக, பார்ப்பவர்கள்,