பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 113 இடைமறிக்கிறாள். H 'எனக்கு இப்போது குழந்தைப்பேறு வேண்டாம். கருக்கலைப்புக்கே நான் வந்தேன்.” மருத்துவர், அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமலே, 'திருமணமான பெண்தானே?' என்று வினவ, எல்லா விவரங் களையும் அறிகிறாள். 'முதல் குழந்தை தொழிலதிபர் வீட்டு முதல் வாரிசு. உன் புருசனைக் கூட்டி வா, அழிப்பதற்கு நான் உடன்பட மாட்டேன்' என்று மறுத்து விடுகிறார். இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் செவிலி, இவர்கள் வெளியேறும்போது, அந்தப் பெண்ணைத் தனியே அழைக்கிறாள். 'யம்மா.. டாக்டர் இணங்கி இருந்தாலும், நான்தான் அதைச் செய்வேன். இப்போதும் என்னால் செய்ய முடியும்...” நாயகியின் தாய் அவசரமாக வெளியேறி முன்னறையின் தொலைபேசியில், மருமகனிடம் மருத்துவமனையில் இருப்ப தாகவும், உடனே வரவேண்டும் என்றும் கூறி வைத்து விடுகிறாள். திரும்புகிறாள். அதற்குள் அந்தச் செவிலி, பேரம் பேசி, பணம் பெற்று விடுகிறாள். தனியறைக்குக் கூட்டிச் செல்லவில்லை. அங்கே உட்கார வைத்து ஒரு ஊசி கையில் போடுகிறாள். இது முடிந்த நிலையில், கணவன் வந்து விடுகிறான். பிரசவ வலி வந்து துடிப் பதையும், பிரசவம், வயிற்றைக் கீறிக் குழந்தையை எடுக்கும் சிகிச்சை என்றெல்லாம் தத்ரூபமாகக் காட்டும் தொலைக்காட்சித் தொடரில் வெளியில் வைத்து ஒரு ஊசி போடுவதுடன் முடித்துவிட்டதாகக் காட்டும்போதே, கணவனும் வந்து விடுகிறான். உடனே நாயகி முந்திக்கொண்டு, 'அம்மாவுக்கு வயிற்று நோவு என்று அவசரமாகக் கூட்டி வந்தேன்' என்று நடித்து இந்தக் கருக்கலைப்பு தெரியாமல் மறைக்கும்போது, மருத்துவர் அங்கே வந்துவிடுகிறார். 'ஓ.. நீங்களா? நீங்களா இவள் கணவர்?’ என்று அறிமுகம் செய்து கொண்டதும், 'உங்களிடம் நான் பேசவேண்டும்!” என்பார். அப்போது செவிலி திடீரென்று, 'அம்மா, நாலாம் நம்பர் நோயாளிக்கு அவசரமாகச் சிகிச்சை செய்ய வேண்டும்” என்று அவரை அழைத்துச் செல்வதாகக் கருக்கலைப்புப் பகுதி முடிகிறது. 2- - B