பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ இருத்தலுக்கான... 112 திருமணத்தை உடனே முடிக்க வேண்டும் என்ற கவலை மேலிடுகிறது. ஆட்சியரின் மனைவி, குழந்தை வருவதும், அப்போதும் இவர்கள் உறவு தடைபடாமல் நீள்வதும் கதையின் சுவாரசியங்கள்! இன்னும் ஒரு தொடரில், கதாநாயகி குழந்தை வேண்டுமென்று விரும்பினாலும் நாயகன் விரும்பாமல் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடச் செய்கிறான். அதே சமயத்தில் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் 'வில்லி நாயகி அவள் தந்தை மரணமடைந்து கிடக்கையில், (இரண்டாந்தாரமும் அவள் காதலனும் சேர்ந்து செய்த கொலை) நாயகனை, அவசரமாகத் தன் வீட்டுக்கு அழைக்கிறாள். மேலதிகாரியாயிற்றே? இவன் வருகிறான். படுக்கையில் மலர்தூவி அலங்கரித்துக்கொண்டு அவனை வீழ்த்தி உறவு கொள்கிறாள்! இவள் மாத்திரை சாப்பிடாமல் கருவுறுகிறாள்! இப்படி அபத் தங்களுக்கு, கருத்தடை மாத்திரைகள் கருவிகளாகின்றன. தாலி படும்பாட்டைச் சொல்லி முடியாது! இன்னொரு குடும்பக்கட்டுப்பாடு அபத்தம் கருக்கலைப்பு. இப்போது நடந்துகொண்டிருக்கும் ஒரு சில தொடர்களில் இருந்துதான் இந்தச் செய்திகளை எழுதுகிறேன். ஒரு நாயகி, கூட்டுக் குடும்பம். பெரிய தொழிலதிபரின் படித்த மருமகள். தன் கணவரின் வேலைத்திறனுக்கு உரிய மரியாதை தரப் படவில்லை என்று பொருமி, ஒருவழியாகத் தொழிலில் உயர் பதவிக்குரியவராக்குகிறாள். பிறகு தன் திறமையும், வெளிப்பட வேண்டும் என்று எதிர்ப்புகளை வென்று புதிய தனித் தொழிலில் ஈடுபடுகிறாள். அப்போது கருவுற்று விடுகிறாள். மயக்கம், வாந்தி காட்டிக் கொடுத்து விடுகிறது. ஆனால், அது பித்த மயக்கம் என்று கணவனுக்கும் வீட்டாருக்கும் தெரிவித்துவிடுகிறாள். பிறகு தாய்விடு செல்கிறாள். தாய்க்குத் தெரிந்துவிடுகிறது. மகிழ்ச்சியுடன் தொலைபேசியில் மருமகனைக் கூப்பிட்டுச் செய்தி சொல்லுமுன் மகள், அவள் வாயை அடைக்கிறாள். 'நான் கருக்கலைப்பு செய்து கொள்ளப் போகிறேன்” என்று மருத்துவமனைக்குச் செல்ல ஆயத்தமாகிறாள். தாயும் அவளுடன் செல்கிறாள். மருத்துவர் இவளைப் பரிசோதனை செய்வதாகக் காட்டப்படுகிறது. 'கரு நன்கு பொருந்தி இருக்கிறது. சில மாத்திரை மருந்துகள் தருகிறேன். வாழ்த்துக்கள்' என்று மருத்துவர் சொல்கையில் நாயகி