பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 111 செய்ய வேண்டும் என்று பலதுறைகளில் ஆர்வம் காட்டுபவர்கள். அதில் ஒருத்தி ஆட்சியர் ஆக வேண்டும் என்று நிர்வாகத் தேர்வுக்குப் படிக்கிறாள். இவர்கள் ஒரு வகையில் கவர்ச்சிக் கன்னி யராகவே அவதாரம் எடுப்பார்கள். முதலில் இவள் காட்சி ஊடகச் செய்தியாளராக ஒர் இளம் ஆட்சியாளர் அலுவலகத்தில் தோன்று வாள். அந்த ஆட்சியர் லஞ்சம் பெறுவதாகவும் அதை அவள் அவரறியாமல் படம் பிடித்ததாகவும், காண்பவர்கள் சுவாரசியத் தைக் கூட்டும். ஆனால், அவன் மிகவும் நல்லவன் என்றும், நாயகி, ஐ.ஏ.எஸ். படிப்பவள் தன் கனவை அவளிடம் சொல்ல நெருக்கம் ஏற்பட்டுவிடும். நாயகியின் பின்னணி, அவள் ஒரு சமையற்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவள். தந்தை திருமணம் மற்றும் பொது விருந்துகளுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யும் நாணயமான குத்தகைக்காரர். அவருக்கு உதவியாக உத்தமமான சகோதரியின் மகன். சகோதரிக்குக் கணவனில்லை. நாயகியின் தாய், அத்தை, மகன், தந்தை யாருமே அதிகம் படித்தவர்களல்ல. மிகுந்த அன்புடன் அவளை வளர்க்கிறார்கள். விருப்பம்போல் செயல்பட சுதந்திரம் அளித்திருக்கிறார்கள். நம்பிக்கை. ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படிக்கும் சாக்கில் மனைவி, குழந்தை என்று குடும்பம் உள்ள ஆட்சியருடன் நெருக்கம் ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் கயவன், ஊரில் மனைவி குழந்தை இருப்பதை மறைத்து, இவளை அனுபவிக்கிறான். இங்குதான் அந்தப் பெண் வீட்டில் ஏதோ மாத்திரை சாப்பிடுவதை அத்தை பார்க்கிறாள். 'என்னம்மா தலை வலியா?' என்று கேட்க, நாயகி மழுப்புகிறாள். அத்தைக்குத் தன் மகனை அவளுக்குக் கட்ட வேண்டும் என்று ஆசை. ஏன்? குடும்பத்தில் அனைவருக்கும் அந்த ஆசை உண்டு. சமையற் காரனான அத்தை மகனோ, இவள் மிதித்த இடத்தைப் பூசை செய்யும் மரியாதை வைத்திருக்கிறான். அந்த ஆட்சியருக்குப் பிடிக்கும் அப்பத்துடன் சாப்பாடு கொண்டு வந்தும் பரிமாறு கிறாள். ஒருநாள் அந்த மாத்திரைத்தாள்.அத்தை கையில் கிடைத்து விடுகிறது. பெருக்கும்போது. அதைக் கொண்டுபோய் அடுத்த வீட்டுப் பெண்மணியிடம் காட்டுகிறாள். 'இது கருத்தடை மாத்திரையாயிற்றே? இங்கே யார் சாப்பிடுகிறார்கள்?' என்று கேட்டு வைக்கிறார். தன் மகன் அண்ணன் மகளுடன் நெருக்கமாகப் பழகுவதால், இத்தனைக்கும் வந்துவிட்டதா என்று உள்ளுரப் பூரித்தாலும்,