பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ இருத்தலுக்கான... 110 முறியடிக்கச் செய்கிறாள். வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதை. தன் இளைய சகோதரிக்காக 'வாடகைத்தாய் ஏற்பாடு செய்ததில் அடங்கியிருந்த மாமியார், தன் மகனுடன், வாடகைத் தாய் ஏற்பாடு என்பதெல்லாம் வெறும் நடிப்பு. எங்கள் குடும்ப வாரிசுக்காக இப்போதே மறுமணம் ஏற்பாடு செய்வோம் என்று அச்சுறுத்த, இந்தச் சகோதரியும், அவருடைய உயர் சாதிக் கணவனும், நடிப்பல்ல' என்று எத்துணை மன்றாடியும் அவர்கள் கேட்கவில்லை. இந்த மூத்த சகோதரிதான் குடும்பங்களுக்காகத் தியாகம் செய்யும் உத்தமநாயகி. எல்லோரையும் அரவணைத்துச் செல்லும், அலுவலகத்தில் அதிகார பதவியில் (கணவன் வேலை செய்யும் அலுவலகத்தில்) இருந்தாலும், குடும்பப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் எடுத்துக்காட்டான நாயகி. இவளும் இவள் கணவனும் திருமணமான பின்னரும் குடும்பப் பிரச்னைகளுக்காக ஒரு சந்ததியைப் பெறுவதைத் தள்ளிப் போடுவதாகச் சொல்லப் படுகிறது. ஆனால், இவர்கள் புலனடக்கம் கடைப்பிடிப்பவர்கள் என்று சூசகமாக அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த அந்த உத்தம கணவன் - நாயகியின் காதலனாக இருந்து எதிர்த்து, மாமியாரையே இளகவைத்த நாயகியை, ஒப்பித் திருமணம் செய்தவன், 'என் மனைவியே உங்கள் குடும்பத்துக்கு வாரிசுதர, வாடகைத் தாயாக இருப்பாள்!' என்று அறிவிக்கிறான். உத்தம நாயகியாயிற்றே! மறு பேச்சின்றி வெளியே வருகிறாள். இங்குதான் முரண்பாடு. உயர்சாதியில்லை என்றாலும் பரவா யில்லை. பெண் நல்ல குணமுள்ளவள், அலுவலக வேலை என்று தலை முண்டிதம் செய்யப்பட்ட பாட்டி முதல் கொண்டாடும் நாயகியிடம் ஒரு சந்ததியை எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருப்பவளுக்கு - மாமியாருக்குக் குண்டு வெடித்தாற்போல் இருக்கிறது. யார் வாரிசை யார் சுமப்பது? வாடகைத்தாய் இவள் என்றால், என் பிள்ளை வாடகை அப்பனா? என்று பொங்கிக் கரைகிறாள். ஆனால், நாயகி அதே பிடியில் நிற்கிறாள். இத்தகைய அபத்தங்கள் ஒவ்வொரு தொடரிலும் அன்றாடம் அறிவார்ந்த பெண்களையும் கட்டிப்போடுகின்றன. குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான அனைத்துச் செய்திகளும் பெண்கள் என்றென்றும் விழிப்புணர்வு பெறாமல் வைத்திருக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இன்னுமொரு மெகா தொடர். நாயகியர் ஐவரும், சாதனை