பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 109 வாணிபத்தை நடத்துபவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. நம் உள்நாட்டுப் பெண்களின் சிறு தொழில்களைக் கபளிகரம் பண்ணிக்கொண்டு, உருளைக்கிழங்கு வறுவல் முதல் குடிக்கும் தண்ணிர் வரை வாணிபம் செய்ய, நம் பெண்களின் உடல்களை யும் மையமாக்கி விளம்பரம் வாங்கி, நன்றாக அழுங்கள்! இதுதான் உங்கள் நிலை. நீங்கள் பட்டம் பெற்றாலும் சட்டம் செய்தாலும், இப்படி அழுந்துவதுதான் விதி! உங்களை நீங்களே முட்களாகக் குத்திக்கொள்வீர்கள்! உங்கள் உடல் மீது நாங்கள் மிதித்தாடுவோம்!” என்று அறிவுறுத்தும் கருத்துக்கள் கதைத் தொடராக வருகின்றன. எதற்கும் ஆகாத முதுமையை நீட்டிக் கொண்டிருக்கையில் இந்தப் பகாசுர சீரியல் மன்னர்களிடம் யாரும் நியாயம் கேட்பதில்லை. வியாபாரிகள், அந்த சீரியல் களில் வரும் வன்முறைகளுக்குச் சொந்தக்காரர்கள். இன்று, எந்தப் பெண்ணும், ஆணைக் கருத்தடைக்கான எளிய சிகிச்சைக்கு உட்படச் சம்மதிப்பதில்லை என்பதற்கு இந்த சீரியல்கள் அன்றாடம் அவள் உள்ளுணர்வில் புகுத்தும் ஒர் அச்சம். வழக்கொழிந்து போன, கைம்பெண் முண்டிதங்கள் இந்த உலகில் நடமாடும் அதே சமயத்தில், வாடகைத் தாய் சமாசாரமும் வரும். இல்லையேல், முதல் மனைவியை விட்டுவிட்டு வாரிசுக்காக, மாமியாரும், அவர் மகனும், வேறு ஒரு பெண்ணைக் கொண்டு வருவார்கள். அவளால் கருவைச் சுமக்க முடியாது என்று மருத்துவர் சொல்லிவிடுவார். தத்துப்பிள்ளை எப்படி வாரிசாகும்? வாடகைத் தாய் யார்? உருப்படியில்லாத ஒரு பத்து பேர் உள்ள 'குடும்பத்தில் ஒரு கையாலாகாத கணவன் தன் மனைவியை வாடகைத் தாய் வாணிபம் செய்கிறான். (மாமியாரோ பிடிவாதமானவள்) வேறு ஒரு திருமணம் செய்து வைப்பேன் என்று தீவிரத்தில் இறங்குகையில் அவள் சகோதரி, உயர்ந்த சாதியில் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டவள். தங்கையின் மணவாழ்வைக் காப்பாற்ற மேற்படி ஒரு வாணிபப் பெண்ணை வாடகைத்தாய் நிச்சயம் செய்ய, ஐந்து லட்சம் பேசி, முன்பணமாக ஐம்பதாயிரம் கொடுக்கிறாள். இங்கு ஒரு வில்லி தோன்றுகிறாள். மேற்படி குடும்பத்தில் சகோதரியின் சகோதரிக்கு நாத்தி. இவள் ஒரு வில்லனோடு சேர்ந்து வாடகைத் தாய் பெண்ணைச் சந்தித்து மிகப் பணக்கார, வெளிநாட்டு ஒப்பந்தம் முப்பத்தைந்து லட்சம் என்று பேசி முதல் ஒப்பந்தத்தை