பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ இருத்தலுக்கானr... 108 பற்றி நன்கு உணர்ந்திருக்க வேண்டும். உலக முழுவதும் இன்று உணவுப் பற்றாக்குறை, நீர்ப்பற்றாக்குறை, வேலையின்மை போன்ற பிரச்சனைகளை விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அத்துடன் தங்கள் வளங்களைக் காப்பாற்றிக்கொண்டு பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த அழிவு ஆயுதங்களையும், பிற படைத் தளவாடங்களையும் உற்பத்தி செய்து, அதன் வாயிலாக ஏழை நாடுகளிடையே போரை மூட்டி, அதன் பயனாக அவர்களை உறிஞ்சும் வல்லரசையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், தட்ப வெப்பம் கொண்ட பிரதேசங்களை உள்ளடக்கிய இந்திய அரசியல் இந்நாள் மிகத் தீவிரமாகவும் மனித நேயத்துடனும் செயல்படுத்த வேண்டிய திட்டத்தைப் பெண்களுக்கு எதிரான கட்டாயங்களால் சின்னபின்னப்படுத்தி இருக்கும் நிலையைப் பார்க்கிறோம். இதுபோன்ற முக்கியமான நுட்பமாகக் கூர்ந்து செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் வெற்றி பெறுவதிலும், சமுதாயம் சார்ந்த ஒத்துழைப்பு கூடுவதற்கும், ஊடகங்களின் பங்கு இன்றியமை யாததாகும். அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் வானொலி, தொலைக்காட்சிச் சானல்கள் அவற்றின் முக்கியத்துவம் அறிந்து விளம்பரங்களையோ பயன்படக்கூடிய அறிவுரைகளையோ மக்களிடம் சென்று சேர்க்கிறார்களா என்று பார்க்கலாம். தொலைக்காட்சி மூலமான பிரசாரங்களில் இப்போதெல்லாம் பெண் குழந்தைக்கு ஆதரவான பெருமைகளையும், சலுகைகளை யும் ஒளிபரப்புகிறார்கள். ஆனாலும், மக்கள்தொகைக் கட்டுப் பாட்டுக்கான ஒருங்கிணைந்த தேசியக் கொள்கை என்பது புலப்பட வில்லை. ஏனெனில் தொலைக் காட்சி, வானொலியைக் காட்டிலும் கவர்ச்சியுடன் எளிய மக்களைக் கொண்டு செல்லும் சாதனம். மகளிருக்காக என்று தாய்ப்பால் வாரம், பிறப்பு, இறப்புப் பதிவு செய்தல் போன்ற விழிப்புணர்வு பெற வேண்டிய செய்திகளை ஒளிபரப்புகிறார்கள். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சிகளை விட, குப்பம் குடிசையில் இருந்து, கோமான் மாளிகை வரையிலும் பெண்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகள் பாம்புக் கயிறாய் எல்லோரையும் கட்டிப் போடும் மெகா சீரியல்களே. 'சீரியல் குத்தகை எடுத்து, மக்களின் பயன்படு நேரங்களை, அழுகை மயமாக்கிப் பொருளிட்டும் பெரு