பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../அரசியல்... 116 'இந்தக் கிராமத்தில் முன்ன நடந்திச்சாம். இப்ப இல்ல. ஏன்னா, பொம்புளங்களும் மூணு புள்ளன்னா ட்யூபெக்டமி' அறுவைச் சிகிச்சை பண்ணிக்கிடுறாங்க. ஆம்புளங்களும் சில பேருங்க அறுவைச் சிகிச்சை பண்ணிருக்காங்க!” 'பரவாயில்லையே!” ஆய்வாளர் வியந்தார். 'குழப்பம் இல்ல?” செவிலிப் பெண் சிறிது தயங்கினாள். 'ஒருக்க ஆபரேஷன் பண்ணிட்டபிறகு ஒரு ஆம்புளப் பிள்ள பிறந்திடுச்சு!" ஒரு சில நிமிடங்கள் அமைதி. 'பெண் பண்ணிக்கொண்ட பிறகா?’’ 'இல்லீங்க. அந்தம்மா பண்ணிக்கல. அவருதான் பண்ணிட்டாரு. அந்தம்மா கர்ப்பமாயிட்டாங்க. ஆம்புளப்புள்ள பெறந்திடிச்சி. முதல்ல ரெண்டு பொண்ணு, ஒராணு. இப்ப ஒண்ணு.” 'அப்புறம் என்ன ஆச்சி?’’ ஏனெனில் அந்த ஆண் பெண்ணின் நடத்தையில் சந்தேகம் கொண்டு ஒதுக்கிவிடுவான். ஆனால் அது நடக்கவில்லை. அந்தக் குடும்பத்தலைவன், அன்றைய முதலமைச்சருக்கு அந்தப் பிள்ளையை வளர்ப்பதற்கு அவர்தாம் பொறுப்பேற்க வேண்டும் என்று எழுதினான்! காலத்தோடு இசைந்த விழிப்புணர்வு என்றுதான் கொள்ள வேண்டும். பெண்ணை ஒதுக்கவில்லை. மருத்துவர் மீது வழக்கு போட வேண்டும் என்பது தெரியாது. மூன்று பிள்ளைகளுக்கு மேல் வருமானம் சரிக்கட்டுவது இயலாததாகும் என்று அவனே சிகிச்சைக்கு உட்பட்டான். நியாயமான வழியில் தன் கோரிக்கையை விடுத்தான்! பிறந்தது ஆண்பிள்ளையாயிற்றே? 'உங்களால் வளர்க்க முடியாத பெண் குழந்தைகளை அரசு தொட்டிலில் விடுங்கள்’ என்று அரசு சொன்னாலும், சிலர் உரிமை உணர்வுகளை முன்வைத்துக் கொல்வது நடக்காமலில்லை.