பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 117 உரிமை உணர்வுகள்: ஒரு குடும்பம் என்றால், பிள்ளைகள், அவர்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். இப்போது, 2004, டிசம்பர் 26ல் சுனாமி, ஆழிப் பேரலையில் சின்ன பின்னமான குடும்பங்களில் தாய் தகப்பனற்ற அநாதைகள், இளம்பிள்ளைகளற்ற முதியோர் என்று தனித்துவிடப்பட்ட மனித உயிர்கள் எங்கெங்கோ இரைந்து போயிருக்கின்றன. சில பெற்றோர், குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை செய்துகொண்டுள்ளனர். இருக்கும் இரு குழந்தைகளே போதும் என்றிருந்தார்கள். இதுபோல் விபத்துகளாலும் கொள்ளை நோய்களாலும், சந்ததியே இல்லை என்ற நிலை வரலாம். அத்தகைய நிலையில், நவீன அறிவியல் உத்திகள், மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்ய வழிகாட்டி இருக்கின்றன. ஆனால், இந்த நாட்டுச் சூழலில் அது அவசியமா? அநாதைப்பிள்ளைகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் பிள்ளைகளை இழந்த பெற்றோர். இந்தப் பெற்றோர் அநாதைகளைத் தங்கள் பிள்ளைகளாக எடுத்து உரிமை கொண்டு, வளர்க்கலாமே என்று தோன்றலாம். ஆனால் விதியின் விளையாட்டையும், அரசு தன் பொறுப்பு போல நினைத்து, இந்த ஏழை நாட்டில் மக்கள் பெருக்கத்தால் திணறும் நாட்டில் மாற்று அறுவைச் சிகிச்சை இலவசமாகச் செய்ய உதவும். பிள்ளைகளை இழந்து பெற்றுக்கொள்ள வழியின்றி குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் வருந்த வேண்டாம் என்று அறிவிக்கிறது. இந்தச் சிகிச்சை சிக்கலானது: முழுதும் பலனளிக்கக் கூடியதென்பதற்கு உத்தரவாதமும் இல்லை. எதோ மக்களின் உரிமைகளை அரசு வலிந்து பறித்தது போலும், இப்படி ஒரு சந்தர்ப்பம் நேரிட்டதும் அதற்குத் தீர்வு காண்பது போலவும் நீங்கள் எப்படியேனும் சொந்தமாகவே பெற்றுக் கொள்ளலாம் என்பதற்கு என்ன இலக்கு? கருக்குழாய், விந்துக் குழாய் துண்டிப்புகள் விருப்பம்போல் துண்டிப்பதும், இணைப் பதுமான சிகிச்சைகள். இத்தகைய பொருளாதார நெருக்கடிகளில் சுற்றுச்சூழல் வாழ்வாதார நெருக்கடிகளில் அவசியமா? அவசிய மான நேரங்களில் கூட, தன்னுடையது என்பதை மாற்றிக்கொள்ள விட்டுக்கொடுக்காமல் பதவிமோக அதிகாரங்களில் இருப்பதற்காக மக்கள் நலன்களைக் கொள்ளையடிக்கும் ஒர் அரசில் பெண் அதிகார உரிமையில் இருத்தலுக்கான ஒரு செயல்படுத்த இயலாத சலுகையாகவே கருதத் தோன்றுகிறது.