பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../அரசியல்... 118 மேலும், பல்வேறு இன, மொழி, பிராந்திய கட்சி வேற்றுமை களைக் கெண்ட இந்திய அரசியலில், மைய அரசுதான் நிதி ஒதுக்கீடு செய்கிறது. கேரளமும், தமிழகமும், பாண்டிச்சேரியும் வளர்ச்சி முன்னேற்றத்தில் கல்வியறிவில், பெண்கள் விழிப்புணர்வில் இருத்தலுக்கான ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் (குழந்தை மரணம், பிறப்புத் தடுப்பு, தாய் சேய் நலம், முன்னேற்றங்கள்) முதன்மை பெறும்போது, மைய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவது எந்த விதத்தில் நியாயம்? மாறாக, எல்லாவற்றிலும், பிடிவாதமாகப் பின்தங்கியுள்ள பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு என்பது அந்தப் பிற் போக்குச் சக்திகளைத் தட்டிக் கொடுப்பதாக, உற்சாகப்படுத்து வதாகப் பரிணமிக்கிறது. இந்த முரண்பாடுகளுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது, மக்களை ஏமாற்றும் ஒரு முயற்சியே. இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால், அவர்கள் கல்விக்கும், வளர்ப்புக்கும் திருமணத்துக்கும் ஒரு தொகை முன்னேற்பாடாக அரசு ஒதுக்கித் தரும். பெற்றோரில் ஒருவர் குடும்பக்கட்டுப்பாட்டுச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். பெண் குழந்தை எட்டாவது வரை படித்திருந்தாலே அவள் திருமணத்துக்குப் பத்தாயிரம் ஒதுக்கப்படும். பெண் குழந்தைகள் தங்கிப் படிக்க, விடுதி வசதி, இலவச சைக்கிள், தொலைக்காட்சி விளம்பரம் ஆசை காட்டுகிறது. ஆனாலும், கட்சி அரசியல் எல்லாவற்றிலும் புகுந்து விளையாடுகிறது. மகள் கல்யாணத்துக்குப் பணம் வாங்க முந்நூறு ரூபாய் கொடுத்து விண்ணப்பப் படிவம் வாங்கிப் பூர்த்தி செய்து கொடுத்து விட்டு அந்தப் பணத்தைப் பெற ஏழைத் தகப்பன் நடையாக நடக்கிறான். எழுதப்படிக்கத் தெரியவில்லை என்றாலும் கட்சிச் செல்வாக்கில் சில ஆயிரங்களேனும் தேறுமா, திருமணம் செய்து கொண்டு கணவனுடன் வசதியாக வாழும் பெண்ணையோ, மருமகனையோ சேருமா என்பது தெரியாது. விவசாயத்துறையில் உழவும், அறுவடையில் பகுதியும் மட்டுமே ஆண் பங்கேற்கிறான். ஆனால், பெண் எண்பது, தொண்ணுறு விழுக்காடு வேலைகளையும் செய்கிறாள். ஆனால், இரண்டு பெண்களே உடைய தந்தை நிலத்தை மருமகன் பேருக்குத்தான் எழுதுகிறான். பெண் கைம் பெண்ணாகி வந்தாலும்,