பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../அரசியல்... 122 காரப் பொருட்கள், இன்னபிற ஆயிரமாயிரம் பொருட்களின் வண்ண வண்ணப் படங்கள் கவர்ச்சி வலை வீசுகின்றன. ஆனால், குடும்பத்துப் பெண் கொலை செய்யப்படுகிறாள். கோமானின் மகள் கருக்கலைப்பு, போதைமருந்து என்று விடிகிறாள். மருத்துவர் குடும்ப நல ஆலோசகர் கூறுகிறார். கருக் கலைப்பு நிரந்தரமான தீர்வாகாது. இரு மக்களிடையே இடைவெளி இருப்பதற்குத்தான் அந்த முறை பயன்படும். இரண்டு குழந்தை களுக்குப் பிறகு வேண்டாம் என்றால் அறுவைச் சிகிச்சையே உகந்தது. இருபதுக்குள் இரண்டு பெற்று விடுகிறாள். அறுவைச் சிகிச்சை உகந்ததா? அல்லது ஆண் உட்படுவானா? மருத்துவராலும் எதுவும் சொல்ல முடியாது. கருக்கலைப்பு - தாராளமயப்படுத்து வதற்கு முதன்மையான காரணம் இதுவே. தெரிந்த கருக்கலைப்புகளைக் காட்டிலும் தெரியாமல் செய்யப் படும் முயற்சிகளில் ஒர் ஆண்டில் 78 ஆயிரம் சாவுகள் நிகழ்வதாக ஒர் அறிக்கை தெரிவிக்கிறது. இது மட்டும் எப்படி சரியான அறிக்கையாகும்? கருக்கலைப்பை அரசே மேற்கொள்வதனால், "பாதுகாப்பற்ற' என்ற நிலைமை களையப்படுகிறது. அவ்வளவே! நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார மேதை அமார்த்தியா சென், உலகெங்கும் 10 கோடி பெண்மக்கள் மாயமாகிப் போவதாகக் கூறியிருக்கிறார். கைப்பூண் அல்ல, கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்! 20. மனிதம் விழுங்கும் அறிவுசார் இலக்குகள் பழைய குடும்ப வாழ்க்கைமுறை இந்நாள் இல்லை. அறிவு பூர்வமாகப் பெண் இந்நாட்களில் பல தளங்களிலும் மேம்பாட டைந்து வந்திருக்கிறாள். உணவு முறை, உடை, உறையுள், உடல் இயக்கங்கள், கல்வி என்று எல்லா கூறுகளும் மக்களின் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டிருக்கின்றன. இந்த நிலையில் மாற்றம் தேவையில்லை; பழமையே பொன் என்று பரம்பரைப் பல்லவி