பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 123 களைப் பாடுவதில் பயனில்லை. ஆனால், புதிய மாற்றங்களுக்கும் ஒர் ஆதாரம் வேண்டும். அடிநிலை, உறுதியாக வேண்டும். மக்கட் பெருக்கத்தை இனி தாங்க இயலாத நிலை வந்துவிட்டது. ஆனாலும், பொலிவும், வலிமையும் கூடிய இளைய சமுதாயத்தை நாம் உருவாக்கியாக வேண்டும். மருத்துவ அறிவியல் சாதனைக்கு மேல் சாதனைகள் என்று புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்துக் கொண்டிருக்கிறது. அம்மை, தொண்டையடைப்பான், இளம்பிள்ளைவாதம் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி கண்டிருக்கிறோம். மலேரியா என்ற குளிர் காய்ச்சல் ஐம்பதாண்டு களுக்கு முன் மிகுந்த வாதனையையும் உடல் நலிவையும் தந்து கொண்டிருந்தன. ஆனால், இந்த நோய்கள் இன்னார் இனியர் என்று பாராமல் பீடித்தன. ஆற்றில் புது வெள்ளம் வந்தால், அதைக் குடிநீராகக் குடங்களில் முகர்ந்து செல்லும்போது, வழியில் சுகாதாரப் பணியாளர் நின்று ஒவ்வொரு குடமாக மருத்துப் பொடியைத் துவுவார். காய்ச்சி வடிகட்டிக் குடிக்கும் வழக்கமெல்லாம் தெரியாது. ஆனால் 'மருந்து நாற்றத்துக்குத் தப்பிக் குடத்தைப் பத்திரமாக வீடு கொண்டுவரும் சாகசம் பெண் களுக்குத் (ஆண்களுக்கும் கூடத்தான்!) தெரியும். காலரா, வயிற்றுக் கடுப்பு வந்து இறப்புகள் நேரும். காலரா ஊசி போடப் பள்ளியில் இன்ஸ்பெக்டர் வருகிறார் என்றால், அந்த ஊசிக் குத்துக்குத்தப்பி, காலரா தொற்றாமல் பிழைத்த பிள்ளைகள் ஏராளம். கொக்கிப் புழுநோய், நரம்புச் சிலந்தி நோய் என்றெல்லாம் கூட மருந்துகள் கண்ணாடிக் குப்பிகளில் கொண்டு வைத்துக்கொண்டு பிள்ளை களைக் காப்பாற்றக் கசப்பு மருந்தைக் குடிக்கச் செய்வர். அத்தகைய பிள்ளைகள், பாட்டன் முப்பாட்டன் பாட்டிகளாகி என்றும் இயற்கை விதிக்கும் வாழ்முறையில் வாழ்ந்துவிட்டார்கள். இந் நாட்களிலும் மஞ்சட்காமாலை போன்ற தடுப்பு:ஊசிகள் போட வேண்டும் என்று பணம் பிடுங்குகிறார்கள். பத்தாயிரம், இருபதாயிரம் என்று கொள்ளையடிக்கும் பாலர் பள்ளிகளில் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான குடிநீர் கூட வழங்குவதில்லை. புத்தக மூட்டைகளுடன் குடிநீர் இடைவேளை உணவு என்று ஏழு மணிக்கே "வேன்'களில் அடைபட கையில் பிடித்து நிற்கின்றனர் தாய்மார்கள். இவளுக்கு ஒருநாள் விடுப்பு வேண்டுமென்றால், மருத்துவச்சான்று கூடக் கோரப்படுகிறது. ஆனால், புத்தக முட்டையுடன் குடிநீரும் சுமந்து செல்லவேண்டிய கட்டாயத்தைத்