பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ மனிதம்... 124 தாய்மார் ஏன் எதிர்க்கவில்லை? பிள்ளைகள், சிறுவர், சிறுமியர் கல்வி என்பதுடன் குறிக்கோள் என்ன? இன்றைய கல்விக்குக் குறிக்கோள் பணம், பணம் பணம்தான். பணம் இருந்தால் வசதிகள் பெறலாம்; சுகமான வாழ்க்கை வாழலாம். 'சுகம்’ என்பதன் பொருள் என்ன? 'சுகம் சந்தோஷம்; மகிழ்ச்சி... சிறுபிள்ளை களுக்கு அதிகாலையில் எழுந்து பள்ளிச் சுமையை உடலிலும், மனதிலும் சுமப்பது சுகமா? மூன்று வயதில் தாய்மொழியின் மலர்ச்சியைக் கொடுங்கோல் கொண்டு அடக்கி, வேற்றுமொழி பயிற்றுவிப்பது சுகமா? கல்வி வாணிபத்தில் சிறார் ஒழுங்கான மன வளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் பெறவில்லை. ஆண் குழந்தை யானாலும், பெண் குழந்தையானாலும் இந்நாட்களில் தாயின் அடக்குமுறைக் கட்டாயங்களையே சந்திக்கிறார்கள். பழைய நாட்களில் தந்தையே பொருளாதார உற்பத்திப் பொறுப் பேற்றிருந்தான். அவனே தலைவன். தாய், பாசம், கருணை காட்டுவாள். அவன்தப்பு செய்தால் 'அப்பாவிடம் சொல்வேன்!” என்று அச்சுறுத்துவாள். தாய்மடி இல்லை என்றாலும் பாட்டி, அத்தை உறவுகள் அரவணைக்கும். இன்றைய பிள்ளைகளுக்கு அத்தகைய புகலிடங்கள் இல்லை. தாயும் பொருளிட்டும் பணியில் இருப்பதால், பிள்ளைகளின் பொறுப்பைப் பெரும்பாலும் தந்தைகள் ஏற்பதில்லை. அடித்தள உழைப்பாளர் குடும்பங்களில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு தர்மங்களில் பிள்ளைகள் காப்பகங்கள், மழலைப் பள்ளி, தொடர்ந்த கல்வி என்று இயங்குகின்றன. ஆனாலும், மிகக் குறைந்த விழுக்காட்டுப் பிள்ளைகளே, தொடக்கப்பள்ளி முடிந்து, பத்து எட்டுகின்றனர். வாலிபப் பருவம் கிளர்ந்து வரும்போதும் இடைநிலைக் குடும்பப் பையன்கள் அதிகமான மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். கல்வி, வாணிபப் போட்டி, வேலை உத்தரவாதம் எல்லாமே இளைஞர்களின் அழுத்தங்களுக்குக் காரணமாகின்றன. பணம் பிடுங்கும் ஒவ்வொரு தனியார் பள்ளியும் தங்கள் இலக்குகளை நிர்ணயித்து, மாணவர்களை நெருக்குகிறது. குமரப் பருவக் கிளர்ச்சியில் ஊடகங்கள் (இவையும் வாணிபங்கள்) இவர் களையே இலக்காக்குவதால், எல்லைகள் மீறப்படுகின்றன. திரைக் கதைகளே எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கின்றன. நம் பிள்ளைகள் ஒழுக்கமாக வளர வேண்டுமானால் சமயச் சார்பு அவசியம் என்று கருதுகிறார்கள். இந்தப் பிள்ளைகளின் தந்தை காலத்தில் சமய அடிப்படைக் குடும்பங்களில் இவ்வளவுக்கு