பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 125 வற்புறுத்தப்பட்டதில்லை. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எல்லாக் குடும்பங்களிலும் பாட்டனாரோ, தாயோ, தனித்த வகையில், அவரவர் சமய உணர்வை ஆழமாகப் பதித்து இருக்க வில்லை. சமயச் சார்புள்ள குடும்பங்கள் இருந்தன. ஆனால் பள்ளிப் பாடங்களில் அவை குறிப்பாக வலியுறுத்தப்பட்ட தாகவோதாய்மொழி கற்பித்தலில் சிக்கல்கள் மிகுந்திருந்ததாகவோ தெரியவில்லை. இப்போதோ, தொலைக்காட்சிக் குழந்தை நிகழ்ச்சி களிலும் வானொலிச் சிறார் நிகழ்ச்சிகளிலும் ஒவ்வோர் ஆண்டின் பள்ளி விழா நிகழ்ச்சிகளிலும் பிள்ளைகள் இன்ன சமயத்தவர் என்று குறிப்பாக உணர்த்தும் வண்ணம் வாய்ப்புகள் நல்கப்படு கின்றன. அவன், அவள் பெற்றோருக்கே புரியாத பகவத் கீதை சுலோகங்கள், துதிப்பாடல்கள், ஆங்கிலப் பாடல்கள் மேலாண் மைக் கூறை அறிவிக்கின்றன. மழலைப் பாடல் ஆங்கிலமாகவே கவ்விப்பிடித்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து சூழலுடன் அல்லது தன்னை ஒத்த சிறுவர், சிறுமியருடன் ஒன்றிணைய முடியாத போட்டி மனப்பான்மையுடன் சமுதாயத்துக்கும் குடும்பத்துக்கும் அந்நியமாகும் உணர்வுகளுடன் குழந்தைகள் வளர்கின்றன. சமயம் சார்ந்த உயர்கல்வி நிலையங்கள் மிகப் பிரசித்தி பெற்ற கல்வி நிலையங்கள், நூற்றாண்டாகச்சான்றோரை வழங்கிய நிலையங்கள், இன்றையச் சூழலில், சமய அடிப்படையிலேயே முதல் பரிசுக் குரிய மாணவரோ, மாணவியோ அந்தச் சமயத்தைச் சார்ந்த வரில்லை என்றால் வெளிப்படையாகவே சமய அடிப்படையில் அப்பரிசை வழங்குகிறது. இந்தச் சூழல்கள், இன்றைய வாணிபம் பிள்ளைகளுக்குப் பலவேறு மனச் சிக்கல்களைத் தோற்று விக்கின்றன. பெண்கள் ஆண்களுக்கு மேலாக ஒருமைப்படுத்தப் பட்ட மனஉறுதியுடன் இயங்குகிறார்கள். அதனாலேயே வேலை வாய்ப்புகள், கல்வி முதன்மை அவர் களை நாடிவருகின்றன. நூற்றாண்டுகளாக ஆண்’ என்று கோட்டைபோல் வளர்ந்திருக்கும் மேலாதிக்க உணர்வு, பெண் சீண்டலாக வெளிப்படுகிறது. வன்முறையாக வெளிப்படுகிறது. பெண் தனக்குக் கிடைக்கும் எளிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு சிக்கல்களைக் களைந்து கொள்கிறாள். இந்திரா காந்தி அம்மை ஆண்ட காலத்தில் அன்றைய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சுதந்திரம் அடைந்தபின் தோற்றுவித்த