பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ மனிதம்... 126 ஒர் அனாதை விடுதியை, அதன் வெள்ளிவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்குபெற வந்தார். அப்போது இந்திரா அம்மை நிகழ்த்திய உரை குறிப்பிடத்தக்கது. வெள்ளிவிழா கொண்டாடும் இத்தகைய அமைப்புகள் வளர்ச்சி பெறலாகாது. அது ஒரு நல்ல சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அறிகுறி அல்ல. இத்தகைய ஆதரவற் றோர் இல்லங்கள் அருகிப்போக வேண்டும். பெண்கள் உரிமை பெற்றிருப்பதற்கு அதுவே அறிகுறி என்றார். இப்போது அந்த இல்லம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று பொன்விழா கண்டிருக் கலாம். இன்னும் தாய்மாரால் குழந்தைகள் மருத்துவமனைகளில் விடப்படுகிறார்கள். தெருவோரங்களில் குப்பைத் தொட்டிகளில் விடப்படுகிறார்கள். உதவும் கரங்கள், காக்கும் கரங்கள், இத்தகைய குழந்தைகளுக்கான கிராமம் போன்ற விடுதிகள் என்றெல்லாம் பல்கிப் பெருகியிருக்கின்றன. பிறப்புத் தடுப்பு களுக்கான இத்தனை நவீன சாதனங்களும் விளைவுகளைக் கட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை. உலகின் மிகப் பழைய தொழிலான 'பொதுமகளிர் துறை" "கணிகையர், தேவதாசியர்' என்ற மரபுகளை அழித்து வென்று வந்துகொண்டிருக்கிறது. அந்நாள், பிம்பிசார மாமன்னனின் காதலியாவதற்காக, ஸ்ாலவதி என்ற கணிகையின் அன்னை, அவள் பெற்ற சிசுவைக் குப்பைத்தொட்டியில் விட்டாள். ஆனால், அந்தச் சிசுவே, புத்தபிட்சுவால் வளர்க்கப்பட்டு ஆயுர்வேதம் கரைகண்ட மிகப்புகழ் பெற்ற சீவகன் மருத்துவனானான் என்று வரலாறு கூறுகிறது. இந்நாட்களிலும், அப்படி நடக்கக்கூடும். ஆனால், சிவப்பு விளக்குச் சந்தைகளுக்கு விற்கப்பட்ட இளந்தளிர்கள், கசக்கி எறியப்படுகின்றன. ஒருபக்கம், அழிக்க உதவும் நவீன மருத்துவ அறிவியல், ஏதேனும் காரணங்களால் மகப்பேறு வாய்க்கவில்லை என்றால் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதாகவும், நூற்றுக்கு நூறு வெற்றி உண்டு என்று முழக்குகிறது. அண்மையில் அறுபத்தேழு வயது பெண்ணுக்கும் எழுபத்திரண்டு வயது ஆணுக்கும் மருத்துவம் செய்து மகப்பேற்றை அளித்த மருத்துவருடன் பெற்றோர் செய்திப் படங்களில் காட்சி அளித்தனர். அறுபத்தேழும் எழுபத்திரண்டும், இரண்டு கிலோ