பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 127 வராத இக்குழுந்தையை எப்படி வளர்த்துச் சந்ததி பெருக்க வாய்ப்பளிப்பார்கள் என்பது புரியவில்லை. தங்களுக்கே ஒரு குழந்தை' என்பது சுகம்; மகிழ்ச்சி! எனவே, இன்றைய சுகங்கள் இயற்கையை ஏற்பதில் இல்லை. மறுத்து செயற்கையை உருவாக்குவதில் இருப்பதாக நம்புகிறது. செயற்கை விபரீதங்களையே விளைவிக்கின்றன. சந்ததி' என்று பழைய மரபுகளைப் பற்றிக் கொண்டு கனவு காண்பவள் பெண். காந்தியடிகளின் மனைவி கஸ்துரிபா, படிப்பறிவில்லாத சாதாரணப் பெண். என்றாலும், ஒர் அரிசனனின் மலசல பாண்டத்தைத் துப்புரவு செய்யும் பணியில் முகம் சுளித்தார் என்ற காரணத்துக் காகக் கணவர் அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளியதும், போகவில்லை, அழுது மூக்கைச் சிந்தவில்லை. 'உமக்கு அறிவு இருக்கிறதா? உம்மை நம்பி வந்த மனைவியை இப்படி வெளியே தள்ளுகிறிரே?’ என்று சுரீரென்ற சொற்களால் சவுக்கடி கொடுத்தார். ஆனால், இதே ‘பா’ இவர்கள் தென்னாப்பிரிக்காவை விட்டு இந்தியா திரும்புமுன் இவர்களுடைய பொது சேவையைப் பாராட்டி, இந்திய அன்பர்கள் அளித்த பரிசுப் பொருட்களில் ஒர் அழகிய வயிரமாலை இருந்ததைக் கண்டதும், ஆசைப்பட்டார். எல்லாப் பொருட்களையும் தொண்டு நிதிக்காக ஏலம் விட எடுத்து வைத்தார் அடிகள். 'இந்த வயிரமாலை இருக்கட்டும். எனக்கு வேண்டாம்! நாளைக்கு என் மகனுக்குத் திருமணமாகி, மருமகள் வரும்போது போடலாமே!” என்றார் கஸ்தூரிபா! கணவனின் தன்மையறிந்தும், வாழ்ந்து அனுபவம் பெற்றும், சந்ததி - மருமகள் என்று வேரோடிய பெண்ணியல்பு மின்னலாகப் பளிச்சிடுகிறது. பெண்ணின் இந்த இயல்பையே, கருக்குழாய் துண்டிப்பாகவோ, நீர்ச் சுரப்பிகளின் 'பால் மாற்றி, சினை முட்டைக் கோளாறுகளாகவோ உடலில் அரங்கேற்றம் செய்வத னால் விளையும் சுகங்கள், சுகங்களாக மலருகின்றனவா? மனித வாழ்வில் சுகம் தேடுவது என்பது கானல் நீர்; கிடைத்த வாழ்வை மனப்பக்குவத்துடன் ஏற்பதே ஆனந்தத்தின் அறிகுறி என்பதுதான் இந்திய தத்துவம். இந்தத் தத்துவத்தைப் பொருள் புரியா வடமொழிச் சுலோகங்கள் வாயிலாகவோ, அல்லது தமிழ்த்திருமறை