பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ மனிதம்... 128 வாசகங்களின் மூலமாகவோ பின்னாள் மலர இருக்கும் பொருளும் போட்டியும் குறியான வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கக் கூடியதாகக் கொள்ள முடியுமா? ஒழுக்கக் கல்வி, சூழல் இரண்டுமே முரண்பாடுகளாக இருக்கின்றனவே! எனவே தீய விளைவுகள் ஒவ்வாமை ஏற்படாதவாறு கல்வியும் ஒழுக்கமும், விடுதலை மகிழ்ச்சியும் அளிப்பதுதான் இன்றைய சமுதாயத்துக்கான அறைகூவல்! 21. சோதனைக் களங்கள் சிெறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சி. அப்போதெல்லாம் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேயர் கடிதங்கள் முக்கியமாக இடம் பெற்றன. மகளிருக்கான நிகழ்ச்சிகளில், பார்ப்பவர்களை ஊக்குவித்துப் பங்கு பெறச் செய்யும் முயற்சியாக, மாதம் ஒருமுறை சிறந்த கடிதம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு ஒர் ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப் பெற்றது. அப்பரிசை, பிரபலமான ஒரு துறைப் பெண் மணியைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்து வழங்கச் செய்தனர். அப்படி வந்த ஒரு கடிதம், அந்த மாதத்தில் நிகழ்ந்த குடும்பக் கட்டுப்பாடு அவசியம் தொடர்பான கலந்துரையாடலைப் பற்றிய தாக இருந்தது. அதை எழுதியிருந்த பெண்மணி, தம் சுய அனுபவத்தை வைத்தே எழுதியிருந்தார் எனலாம். ஏனெனில் கருக் கலைப்புச் செய்து கொள்ளத் தீர்மானிக்கும்போது, வயிற்றி லிருக்கும் கரு, சுற்றிச் சுற்றி வந்து 'அம்மா, என்னைக் குலைக் காதே, வளர விடு' என்று குரல் கொடுப்பது போன்று வேதனை உண்டாவதாக எழுதியிருந்தது கடிதத்தின் சாராம்சமாக இருந்தது. இக்கடிதமே சிறந்தது என்று பரிசு அறிவிக்கப்பட்டது. அந்தப் பெண்மணிக்கு மிகுந்த மகிழ்ச்சி. குறிப்பிட்ட நாளில் மகளிர் பகுதியில் அவர் தோன்றி, கடிதத்தைப் படித்துக் காட்டிவிட்டு, சிறப்பு விருந்தினரிடம் பரிசைப்பெற்றுக் கொள்ளவேண்டும். மகிழ்ச்சியுடன்நிலையம் சென்றார். விருந்தினராக வந்திருந்த பெண் மணி, மிகவும் பிரபலமான அரசு மகப்பேறு மருத்துவராக இருந்தவர். அனுபவம் மிகுந்த பெண்மணி. மகளிருக்கான கருத்