பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 129 தடை சிகிச்சைகளைப் பற்றி மட்டுமின்றி, மகப்பேறு மருத்துவம் குறித்த நூல்களும் எழுதியவர். லூப் சாதனங்கள், ட்யூபெக்டமி என்ற கருக்குழாய் அறுவைச் சிகிச்சை, நவீன லேபரோஸ்கோபி சிகிச்சை என்ற பல முறைகளிலும் அனுபவம் வாய்ந்தவர். இத்தகைய மகளிர் நல மருத்துவர் கையில் தாம் பரிசு பெறும் வாய்ப்புக்காக, நிலையத்தவரிடம் நன்றி கூறிவிட்டுக் காத்திருந்தார். ஆனால், வழக்கம்போல அவரை நிலையத்தார் கடிதத்தைப் படிக்கச் சொல்லவில்லை. ஊமையாகப் பரிசு மட்டும் பெற்றுக் கொள்ளும்படி பணித்தார்கள். காரணம் இதுதான். சிறந்த அழைப்பாளர், அரசின் குரலாக இயங்கியவர்; இயங்குபவர். பணியில் இருந்து ஒய்வு பெற்றாலும், அவர் அரசின் குரல்தான். மக்கள் பெருக்கத்தைக் கருக்கலைப்பால் தடை செய்யலாம் என்ற வழிமுறைக்கு எதிரான குரல், அந்தப் பெண்மணியின் கடிதம். பரிசை வழங்கலாம். எதிர்க் குரல் மீண்டும் ஒளிபரப்பலாகாது! அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம், குடியாட்சி உரிமைகளில் ஒன்றான எழுத்துரிமை, அல்லது பேச்சுரிமைகளை ஒப்புக் கொண்டாலும், அரசுப்பணியாளராக விசுவாசமுள்ள ஊழியராகச் செயல்பட்டவர், எதிர்க் குரலை ‘மகளிர் என்ற நோக்கில் கூட ஒப்புக் கொள்ளத் துணிவதில்லை என்பதற்கு இது ஒரு சான்று. வறுமையும், அறியாமையும் அழுத்தும் பெரும்பாலான இந்திய மகளிர் மாஸ் கேம்ப்' எனப்படும் சிகிச்சைக் கூடங்களில் கருக்குழாய்த் துண்டிப்புச் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; பெண்கள் ஒவ்வொருவரும், தனித்தனி உயிரியல்பு உடை யவர்கள் என்று மருத்துவர் பலர் ஒப்புக் கொண்டாலும், அரசுக்கு விசுவாசமாகச் செயல்பட வேண்டியவர்களாகவே இயங்கு கிறார்கள். கருத்தடைச் சாதனங்கள் எல்லாமே பயனற்றவை அல்ல. நூற்றுக்கு நூறு என்று உத்தரவாதம் உடையவையும் அல்ல. நம் பெண்களும், ஆண்களும் இந்த மிக முக்கியமான சமூகப் பொறுப்பில் பங்கேற்று அவரவர்க்கு உரிய சாதனத்தை ஏற்றுத் தானாக வேண்டும் என்ற நிலைக்கு இன்று வந்திருக்கிறோம். கருத்தடைச் சாதனங்களைப் பற்றி நன்கு அறிந்திருக்கும் மருத்துவர்கள், அறியாமையும் வறுமையும் குலவும் பெண்கள், புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று ஒரு முடிவை முன்பே நிச்சயித்து அவர்கள் மேல் திணிப்பது என்பது சரியன்று. இந்தக் காரணத்தாலேயே மக்கள் பெருக்கத்தடை இயக்கமாக மக்களால் E_ – 9