பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ சோதனைக்... 130 ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கவில்லை எனலாம். அதன் அவசியத்தைப் பற்றி அறிந்துகொள்ளாமலே பெண்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதனால் கடந்த கால் நூற்றாண்டு காலங்களில் பல்வேறு நவீன முறைகள் வந்தபின்னரும், ஒரு குறிப் பிட்ட இடைநிலை வர்க்கப் பெண்களே, தமக்குரிய சாதனங்களைத் தேர்ந்து, சிறு குடும்ப விதியை நெறிப்படுத்துகின்றனர். ஆணுக்குரிய விந்துக்குழாய் அறுவைச்சிகிச்சை, தழும்பு கூடத் தெரியாத வண்ணம் பத்தே நிமிடங்களில் செயல்படுத்தப்படும் நவீன மருத்துவம் வந்திருக்கிறது. அண்மையில் இதற்கான சிகிச்சை முகாம்களும் அமைந்திருந்தன. ஆனால், குடும்பங்களில் ஆண் - பெண் மனநலங்கள், நம்பிக்கைகள், ஒழுக்கக்கேடுகளின் விளைவு கள்.தடுக்கப்படலாம் என்ற கருத்தில் தகர்ந்து போகின்றன. ஆண்... மேலானவன். இது ஒருபுறமிருக்க நவீனமான பெண்ணை மையப்படுத்திய, கருத்தடைச் சாதனங்களைப் பற்றிய முழு விவரங்கள், அதை ஏற்கும் பெண்களுக்குத் தெரிவிக்கப்படு வதில்லை. இவை அனைத்தும், பெண்ணின் கருப்பை நலனை, ஒழுங்கான நிணநீர்ச்சுரப்பிகளின் இயக்கங்களால் பராமரிக்கப் படும் இயல்பில் புகுந்து விளையாடுபவை. டெபோ - ப்ரோவரா (Depo-Provera) இது ஊசி மூலம் கொடுக்கப்படுவதாகும். ஒரு ஊசி போட்டுக் கொண்டால், மூன்று மாதங்கள் வரை கருத்தரியாமை நீடிக்கும். இந்த ஊசி மருந்தை ஐக்கிய அமெரிக்க நிறுவனம் தயாரிக்கிறது. இதேபோல் 'நெட் என்’ என்ற ஊசி மருந்தை ஜர்மானிய நிறுவனம் தயாரிக்கிறது. இதை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். இது போன்ற கருத்தடை ஊசிகளை 130 நாடுகளைச் சேர்ந்த 1.3 கோடிப் பேர் பயன்படுத்துவதாகவும் ஏறக்குறைய 20 ஆண்டு காலமாகப் புழக்கத்தில் இருப்பதாகவும், உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. டெப்போ ப்ரோவரா ஊசி, உலகிலேயே அதிகமான பெண்கள் ஏற்றிருக்கும் கருத்தடைச் சாதனமாக இந்தோனே சியாவில் முதன்மை பெற்றிருக்கிறது. இந்த மருந்து, தாய்லாந்து, ஜமைக்கா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, சீனம் ஆகிய நாடு களிலும் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது. அனைத்துலக திட்டமிட்ட பெற்றோர் சம்மேளனமும், ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் மிகக் கருத்துடன் பெண்களின்