பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ சோதனைக்... 132 அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், 1997 லேயே இவற்றுக்கு ஆதரவு குறைந்துவிட்டது. இவை நம் நாட்டுக்கு ஏற்றவை அல்ல என்பதற்கான காரணங்களில் முதன்மையானது இது விலை அதிகமானது. இதைப் புகுத்துவதற்கு சிறந்த பயிற்சியாளர் தேவை. இவை தவிர முன் கூறப்பட்ட இரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிலக்கு, தலைநோய் ஆகியவற்றுடன் கருத்தரித்துவிட்டால் கருக்குழாயில் கருமுதிர்ச்சி, சினைப்பைக் கட்டிகள் போன்ற விளைவுகள் சொல்லப் படுகின்றன. மேலும் 5-7 ஆண்டுகளுக்கு இந்தச் சாதனம் பயன் தரக்கூடும் என்றாலும், அதை வெளியில் எடுக்கும் மருத்துவம், மிகவும் சிக்கலாகிப் போகலாம். எந்தக் கருத்தடைச் சாதனமும் அதை ஏற்கும் பெண்ணின் புரிந்து கொள்ளலும் இசைவும் இருக்கும்போது தான் பயனும் சிக்கலில்லாமல் எதிர்பார்க்கக்கூடியதுமாகலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும், மாதவிலக்குகளுக்கு இடைப்பட்ட நாட்களில் அதிகபட்சம் நான்கே நாட்களில்தான் கருத்தரிப்பு நிகழக்கூடும். அந்த நான்கு நாட்களில் நிகழக்கூடிய கருத்தரிப்புக் காக, அவள் உடலைப் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டு தாக்குவது எந்த வகையில் நியாயமாகும்? முதலில் இவ்வகையிலான ஆய்வுகளும் அறிவியல் மேன்மை களும், கண்டுபிடிப்புகளும் பெண்ணின் உடலை அவளுக்கே அந்நியமாக்கித் தீர்ப்பதையே வலியுறுத்துகின்றன. இவற்றுக்கான நிதியும்கூட எப்படியேனும் மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தித் தீர வேண்டும் என்ற அவசியம் கருதி வழி முறைகளைப் பற்றிக் கவலைப்படாத நாடுகளுக்கு அளிக்கப் படுகிறது. அறிவியலில் மேம்பாடு பெற, நிபந்தனையும் கட்டுப் பாடுகளும் இருக்கக் கூடாது என்ற பொதுவிதிகள், பெண்ணின் கருப்பைச் செயல் பாட்டை மையமாக வைத்த ஆய்வுகளுக்குப் பொருந்தாதவை. இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு புதிய கருத்தடைச் சாதனத்தைப் பரிசீலனை நோக்கில் ஒரு பெண்ணை ஏற்கச் செய்யு முன், அதைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் உண்மையாகக் கண்டறிந்தவைகளையும் விளக்கிய பின்னரே ஏற்றுக் கொள்வதான இசைவு பெறப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல.