பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 133 வெளிநாட்டுத் தொடர்புடன் இங்கு கொண்டுவரப்படும் சாதனங்களின் ஆய்வாளர், 'வாணிபம் ஒன்றையே குறிக் கோளாக்கிச் சாதக விளைவுகளை மட்டுமே விரித்துரைப்பர். சில தருணங்களில் இது சோதனை செய்யப்படுகிறது என்பதையே அறிந்திராத மருத்துவர்கள் அதன் சாதக பாதக விளைவுகளை, மருத்துவமனைக்கு இசைவு தெரிவித்து வரும் பெண்ணுக்கு விளக்க இடமேயில்லை. 'இந்தக் குச்சிகளுக்கு 'நார்ப்ளான்ட்' என்று பெயர். இது புதிய இலகுவான கருத்தடைச் சாதனம். ஒரு சிறு அறுவைச் சிகிச்சை செய்து உடன் கைத்தண்டில் இது பதிக்கப்பெறும். ஐந்து ஆண்டு கள் நீ கருவுறமாட்டாய். உன் இல்லறச் சுகத்துக்குக் குந்தகம் இல்லை. நீ ஐந்து ஆண்டுகள் சென்றபின் வந்தால், இதேபோல் சிறு அறுவைச் சிகிச்சை செய்து எடுத்துவிடுவோம்’. அரசுத் தொடர்பில்லாத சமூக சேவை ஊழியர்கள், உடன் இருக்கும் போது இந்த விவரங்களே தெரிவிக்கப்படுகின்றன. இந்த 'நார்ப்ளான்ட் 1,2,3 என்ற வகைகள் பரிசோதனை செய்யப் படும்போது, 1,2 ல் கண்ட ஒவ்வாத பின்விளைவுகள் சொல்லப் படுவதில்லை. ஏனெனில் இந்தப் பெண்கள் அறிவிலிகள்! சோத னைக்கு உள்ளாக்கப்படும் பெண்ணுக்கு நிச்சயமாகத் தெரிவிக்கப் படவேண்டும்; பின்னரே இசைவு பெற்றதாகக் கருதலாம் என்பது அன்றைய லூப் சாதனத்தில் இருந்து இன்றைய நவீன நிண நீர்ச்சுரப்பிகளின் இயல்புகளை அறிவியல் சாதனைகளால் மாற்றி யமைக்கப்படும் மாத்திரைகள், ஊசிமருந்துகள், குச்சிகள், வளையங்கள் போன்ற பல்வேறு சாதனங்கள் வரையிலும் இந்திய அரசு பெண்களை அந்நியப்படுத்திவிட்டு, போலியான பெண் சக்தி பெறும் கோசங்களை முன்நிறுத்தி, தம்மையும் ஏமாற்றிக்கொண்டு மகளிரை, மக்களை, ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இந்தப் பத்து வளர்ச்சித் திட்டங்களும், பதவி வெறிபிடித்த அரசியல்வாதிகள் அடங்கிய அரசியல் கட்சிகள் மக்களின் நலன் களையும், இயற்கைவளங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொன்னைக் கரடுமுரடுக்கல்லில் தேய்ப்பதுபோல் தேய்த்து, நிராசைக் குழியில் மட்டுமே தள்ளி இருக்கின்றன.