பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ சோதனைக்... 134 இதிலிருந்து நாம் மீள வேண்டும். எப்படி? நம் தேசத்து இளமைகள், நம்பிக்கை நலன்கள், பல்வேறு வாணிபங்களில் சிதையாமல் பாதுகாக்கப்படவேண்டும். நோஞ்சான் குழந்தை களும் நீராதாரம் இல்லாப் பிணிகளும், நம் எதிர்காலம் அல்ல. இன்றைய அரசியலின் வெற்று வார்த்தைகளைப்போல் பல திட்டங்கள் கேட்டுவிட்டோம். ஐந்தாண்டுத் திட்டங்கள், தேசிய விரிவாக்க நலத்திட்டம், ஜவஹர் ரோஜ்கர் யோஜனா, இந்திரா ஆவாஸ் யோஜனா இன்னும் வேலைக்கு உணவு, நூறு நாட்களுக்கு என்ற திட்டம்! அந்தத் திட்டங்கள் செயல்படவில்லையா? ஏழைகள் வரி செலுத்தவில்லையா? ஏழைமை ஏன் அழிய வில்லை? கோடிகள் புழங்கும் வாணிபங்கள் எப்படிச் செழிக் கின்றன? கிராமங்களில் இருந்து குடும்பம் குடும்பமாகப் பழை யதை இடித்துப் புதிய அடுக்குமாளிகைகள் எழுப்ப ஏன் வருகிறார்கள்? வந்த இடத்தில் பாதுகாப்பான நிழல் உண்டா? 'பெண்கள் அந்நாட்களில் பான்டு எனப்படும் அகலச்சட்டிகளில் கல் மண் சுமந்தார்கள். இந்நாட்களில் சிமிட்டிச் சாக்குகளில் மன லையும், கற்களையும் சுமந்து சாரப்படி ஏறுகிறார்கள். அவள் உடம்புக்குக் கருத்தடைச்சாதனம் பாதுகாப்பா? சமுதாய உற்பத்திக்கான நாயகியாகத் திகழும் பெண், பொருளாதாரச் சுமையையும் சுமக்கும்போது, கடினமான மன அழுத்தத்துக்கு ஆளாகிறாள். 'அந்த மூன்று நாட்களுக்கான பஞ்சுக்கவசங்களை விற்கும் நிறுவனங்கள் இவள் உடலோடு இவள் நாணங்களையும் விளம்பரங்களில் வாரி இறைக்கின்றன. இந்த அழுத்தங்களோடு கட்டிட வேலை செய்யும் கூலிப் பெண்களிலிருந்து, மிகப் பொறுப்பான நிர்வாகப் பணி செய்பவர் வரை பல்வேறு சிக்கல்களில் நுழைந்து மீளுகிறார்கள். உங்கள் இரட்டைப் பொறுப்புக்குச் சாதகமாக இவை அழுத்தக்கலன், அழுக்குப்படியாமல் பாதுகாக்க ஆயிரமாயிரம் பொடிகள், பளபளப்பைப் பராமரிக்கப் புதிய கண்டுபிடிப்புகள் என்ப தெல்லாம் அவளை மீண்டும் மீண்டும் எழுந்திருக்க முடியாமல் செய்யும் கண்டுபிடிப்புகளே. புதிய கட்டிடம் எழுப்பும் இடத்தில், ஏதேதோ குச்சிகள், மரக்கழிவுகளைப் போட்டு ஒர் அலுமினியம் குண்டானில் சோறு பொங்கவிடும் பெண்களின் அல்லல்களை யாரேனும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்களா? அவளுடைய ஊர் பெயர்ந்து வந்த கூலியில் பஞ்சுக்கவசம் வாங்கப் பணம்