பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ தொலைக்காட்சி... 138 படி எங்கும் இருக்கின்றன. ஒவ்வொரு நோயும் எதிர்ப்புச் சக்தி, தேய்ந்துபோன உடலைத் தேடி வருகின்றன. இந்த நோய்க்கான கூறுகளைத் தோற்றுவிக்கும் வைரஸ் என்ற கிருமிகள் (H.I.V.) வளரக்கூடிய, வரவேற்கக்கூடிய தீங்கு இரத்தத்தில் இருக்கிறதா என்று கண்டறியும் வாய்ப்பு, தொடக்கக் காலத்தில் நம்நாட்டில் இல்லை. குருதியை அந்த வகையில் சிறப்புப் பரிசோதனை செய்யும் வசதிகளும் பரவலாக இல்லை. சாதாரணமாகவே, விபத்து, அறுவைச் சிகிச்சைகளுக்குத் தேவையான வகை இரத்தம், இரத்த சேமிப்பு நிலையங்களில் கிடைக்கும் என்று கூறமுடியாது. 'இரத்த தானம் செய்வீர்” என்று விளம்பரங்கள் வாயிலாக வேண்டப்படுகிறது. பணத்துக்காகக் குடிகாரன், நோய்க்காரன் எல்லோருமே இரத்ததானம் செய்கின்றனர். (இப்போதெல்லாம் பரிசீலனை செய்யப்பட்டு இரத்தம் எடுக்கப்படுகிறது) முதன் முதலில் இந்தத் தேய்மான - எய்ட்ஸ் நோய், இரத்தம்' பெற்றதனால் வந்தது என்று ஒரு காரணம் சொல்லப்பட்டது. நோய்க்கு ஆளானவர் மீது அந்த இரத்தத்தைப் பெற்றதுதான் குற்றம். பரிசீலனை என்ற கட்டாயங்கள் வந்தபிறகு நோய் அவ்வகையில் வருவது சாத்தியமில்லை. போதைஊசிகளைக் கழுவாமல், ஒருவர் உடலில் இருந்து மற்றவர் உடலில் ஏற்றிக் கொள்ளும் போதை இளைஞருக்கு வர வாய்ப்புண்டு. மேலும், பாலியல் சார்ந்து வக்கிரப்புணர்வுகளில் ஈடுபடுவோருக்கும் இந்த நோய்க் கிருமிகள் உடலில் ஏறி வளரலாம்! ஆனால், முதல் முதலில் இதற்குத் தோற்றுவாய் எப்படி வருகிறது? இந்த நோய்க் கிருமிகள் உள்ளவரைப் பார்த்தால் கண்டுபிடிக்கமுடியாது. இவர்களைத் தொடுவதாலோ, மூச்சுக் காற்று படும்படி உட்கார்ந்தாலோ வராது. சில ஆண்டுகளுக்கு முன், ஒரு மேனிலைப்பள்ளியில் ஏதோ ஒரு காரணத்துக்காகப் பிள்ளைகள் வகுப்பறைகளுக்கு, பள்ளிக்குச் செல்லாமல் 'ஸ்டிரைக்' என்று ஆசிரியர்களை, நிர்வாகிகளை எதிர்த்துக் கோஷமிட்டார்கள். பெண்கள் எப்படி யேனும் இந்தத் தடைகளைக் கடந்து வகுப்பறைகளுக்குச் செல்ல முயன்றார்கள். அப்போது சில மாணவர்கள், இஞ்செக்ஷன்” ஊசிகளில் தண்ணிரை நிரப்பிக் கொண்டு வந்து “எய்ட்ஸ் கிருமிகள் வைத்திருக்கிறோம். போட்டு விடவா?’ என்று கொக்கரித்தார்கள். பெண்கள் தலைதெறிக்கத் திரும்ப ஓடி வந்தார்கள்! “எய்ட்ஸ்’ கிருமிகளை அப்படியெல்லாம் ஏற்ற முடியாது; அவை மிக