பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 139 நொய்ம்மையானவை, என்றெல்லாம் இப்போது அச்சுறுத்தல் களுக்கு மாற்றான கருத்துக்கள் விளக்கப்படுகின்றன. 'இது, பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாகவே பரவக் கூடும். இல்லற ஒழுக்கம்; ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப உறவைப் புனிதமாகக் கருதுங்கள்!' என்று வலியுறுத்தப் பட்டாலும், ஒழுக்கப் பராமரிப்பான பயிற்சிகளோ, கல்வியோ, வளரும் இளம்பிள்ளைகளுக்கும் இல்லை; நடுத்தர வர்க்கக் காரருக்கும் இல்லை; ஏன், முதியோருக்கும் இல்லை; இன்றைய உயிர் வாழ்தலின் இலக்கே போகம், போகம்; போகம்! வளரும் இளம்பிள்ளைகளுக்கு எதிர்கால வாழ்வை - பொருள் ஈட்டக்கூடிய வளமான வாழ்வை நிர்ணயிக்கும் கல்விச் சுமைகள் ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் பாலியல்இன்பங்களின் ஈர்ப்பைக் கிளரும் வகையில் படங்கள் எடுக்கப்படுகின்றன. அந்தப் படங்களின் நாயகர்கள், வளரிளம்பருவத்தை இன்னும் கடக்காதவர்கள். அல்லது கூடுதலாக உருவங்களில் புதிய புதிய நாயகிகள் - காதல் என்ற பெயரில் எந்த வகைகளிலெல்லாம் பருவகால ஈர்ப்புக்கும், அதைச் சுற்றிய சோகங்கள், சூழ்ச்சிகள் வெற்றிகள் ஏன்றெல்லாம் காட்சிகளும் ஆட்டபாட்ட வியூகங்களும் விரிக்கப்படுகின்றன. புதிய படம் வந்து திரையரங்குகளில் விரியுமுன் பல்வேறு ஊடகங்களில் செய்திகள், வளரிளம் பிள்ளைகளையும் இந்த நாட்டின் வாக்குரிமைகளாகப் பரிணமிக்கக் கூடிய ஒரு முதிர்ச்சி யில்லாத சமுதாயத்தையும் அந்த நாயகனைத் தெய்வமதிப்புக்குக் கொண்டு போகக்கூடிய உத்திகள் கையாளப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த நாயகர்களின் பிம்பங்களைப் போட்டி யாகும் ஒரு முறையில் சார்புபடுத்தவும் ஊடகங்கள் செய்திகளை வீசுகின்றன. இந்தப் பத்தொன்பது வயது நாயகனின் பிம்பம் பெண்களைக் கவருவதாகவும் அவனுக்குத் திரைச் சந்தையில் கோடி மதிப்புகள் என்றும் தொலைக்காட்சிகளே திரும்பத் திரும்ப இளம்தலைமுறையினரைக் கிளர்த்திவிடுகின்றன. எனவே, முறையில்லாத பெண்போகம் தேடி அலையும் உந்துதல் சமுதாய ஒழுக்கத்தையே நச்சு ஊசிகளாகக் குதறுகிறது. ஒர் அடுக்கு மாடி வீட்டில், பள்ளியிலிருந்து வந்தபின் சிறுமிகள், சிறுவர்கள் தாயோ தந்தையோ அலுவலகத்திலிருந்து மாலை திரும்புமுன் அச்சமின்றி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கருதிவிட முடியாது. ஐம்பது வயதைக் கடந்த, அறுபதை