பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ தொலைக்காட்சி... 140 நெருங்கும் முதியவர்கூட எட்டு வயசுச் சிறுமியிடம் தம் வக்கிர உணர்வுகளை வெளியிடும் அவலம் நிகழ்கிறது. குடும்பக் கட்டுப்பாட்டில் இருந்து, பால்வினைத் தேய்வு நோய் வரையிலும், ஒழுக்கக்கட்டுப்பாடுதான் முதல்படியாக இருக்கமுடியும். ஒழுக்கம் தவறலாம். விளைவை அறிவியல் ரீதியாகத் தடுக்கலாம் என்ற இரண்டாம் படி முதல் தவறு. மீட்சி இல்லாத விளைவு என்ற நிலையில் விழுந்த பின், அவர்கள் வாழ வழிகாண வேண்டும் என்பது மூன்றாம் படி. ஆனால், சுருதி இல்லாத பண்ணிசை எத்துணை நியாயப்படுத்தினாலும் இனிமை யாக முடியாது. மருந்திருக்கிறதே என்று, காச நோய்க்கிருமிகளை ஏற்றுக் கொள்வது சரியாகாது. இனியும் காசநோய் வராமலிருக்க என்னென்ன பாதுகாப்புகள் உண்டோ, அவற்றையும் உடனடி யாக மேற்கொள்ள வேண்டும். எச்.ஐ.வி. என்ற தேய்வு நோய் பற்றிப்படரும் கிருமிகள் இரத்தத்தில் இருக்கிறது என்று அறிந்தால் சமுதாயத்திலிருந்து அவரை விலக்கும் கொடுமையும் மேற் கொள்ள வேண்டாம்; மறைத்து ஒரு நோயற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து, வாரிசு பெருக்கும் அநியாயத்தையும் அனுமதிக்க வேண்டாம். ஒழுக்கம் எல்லாப் படிகளிலும் வலியுறுத்தப்பட வேண்டும். கருத்தடைக்கான உகந்த முறை களை ஆணும் பெண்ணும் பொறுப்பேற்க அரசு ஆணையும் பொறுப்பாக்கும், ஒரு தேசிய மக்கள் பெருக்கக் கட்டுப்பாட்டுக் கொள்கையை நாடு முழுவதுக்குமான வகையில் செயல்படுத்த வேண்டும். அதேபோல், மக்களின் ஒத்துழைப்பைக் கோருவதில் அரசு கட்சி, சாதி, மத பிராந்திய அரசியல் ஆதாயம் கருதாமல், தனி மனித உரிமைகளை மனதில் கொண்டு செயல்படும் கூட்ட மைப்பை (மகளிர் அதிகமாகப் பங்கு பெறும்) உருவாக்க வேண்டும். எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சைகள், அவர்கள் வாழ்வதற்கான சாதகமான சேவைகள் என்று தம் வாழ்வையே கால் நூற்றாண்டுக்கும் மேலாக அர்ப்பணித்திருக்கும் டாக்டர் சுநிதி சாலமன், திருமணத்துக்கு முன்னும் பின்னும் பாலியல் சார்ந்த நடத்தையில் வேறு தொடர்புகள் இல்லாத இல்லத்தரசிகள், எப்படி இந்த நோய்க்கான கிருமிகளைப் பெற்றிருப்பார்கள்? கணவர்கள் தாம் குற்றவாளிகள்' என்கிறார். இவர்கள் வாழ்நாளில் புரிந்து கொள்ளலுடன் வாழ்ந்து மேலும் சந்ததியைப் பெருக்காம