பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 141 லிருக்கலாம். ஆனாலும், குடும்பமும் வெளி உலகமும் அவளைப் பிள்ளை பெறாதவள் என்று துாற்றலாம். ஆய்வுகள் கணவனின் விந்தணுவில் இருந்து நச்சுக்கிருமி தொற்றிய கூறைப் பிரித்துத் துய்மைப்படுத்தும் சாதனையைக்கூட எட்டி இருக்கின்றன எனலாம். கருவுற்றாலும், சிசுவை நச்சுத் தொற்றாமல் பிரித்து வைப்பதற்கான அறுவைச் சிகிச்சையுடன் குழந்தையைத் தாயின் தொடர்பில் இருந்து பிரித்தெடுக்கும் முறைகளைக் கண்டறிந்திருக் கிறார்கள். ஆனால், பெண் வாணிபம் ஒழிக்கப்படத் தீவிர நடவடிக்கைகளே சாத்தியமில்லை என்பதுதான் இடிக்கிறது. ஏனெனில் இந்தப் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள், ஆணுறைகளை வழங்கி, பயன்படுத்தக் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள் ஒழுக்கப் பாதைக்குத் திருப்புமா? இதேபோல், நகரங்களில் இந்த வாணிப மையங்களில் இருந்து குழந்தைகளைப் பிரித்து, அந்நியப்படுத்துவதாலும் பிரச்னை தீர்வடையுமா? புலனடக்கப் பயிற்சிகள், ஆடம்பரப் பொருள் உற்பத்திகளைத் தடை செய்தாலே சாத்தியமாகும். உணவு, உடை, உடற்பயிற்சி, சீரான மனப்பயிற்சி ஆகியவற்றுக்குத் தடையான அனைத்து சினிமா, தொலைக்காட்சி வாணிபங்களும் முடக்கப்பட வேண்டும். கோடானு கோடி ரூபாய்கள், வறுமைக்குழியில் அறியாமை இருளில் வாழும் இளம் சமுதாயத்தினரை மேலே கொண்டு வரலாம். பள்ளிகளில் ஆசிரியர், மாணவர்களிடம் வருங்கால பாரத சமுதாயம் உருவாகிறது என்ற புரிந்து ணர்வுடனும், கடமையுணர்வுடனும் வகுக்கப்பட்ட பாடதிட்டங் களைக் கற்பிப்பதை மேன்மையாகக் கருத வேண்டும். ஆசிரியர் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகிறார். தங்கமும் பட்டும் பகட்டுமாக மாற்றுச் சீருடைக்கு வழியில்லாத சிறுமியர் முன் நின்று பாடம் சொல்லும் ஆசிரியைகள் இத்தொழிலுக்கு உகந்தவர்கள் அல்ல. அதேபோல், முதல் நாளிரவு மது அருந்திய வாடை போகாமல் சிகரெட் ஊதிவிட்டு வகுப்புக்கு வரும் ஆசிரியரும் ஆசிரியத் தொழிலுக்கு ஏற்றவரல்ல. எனவே ஒழுக்கப் பயிற்சி சொல்லி வருவதில்லை. வாழ்ந்து காட்டி வருவதாகும். பள்ளி வளாகங்களில் சேலை - நகை வாணிபங்களில் இருந்து ஊறுகாய், ஊதுபத்தி வாணிபம் வரை நடக்கின்றன. இதெல்லாம் ஆசிரியர்களின்